அமெரிக்காவினால் இந்தியா வல்லரசாக மாற்றப்படும்! இலங்கையில் மஹிந்தவுக்கு பதிலாக ரணிலையே மோடி விரும்புகிறார்!- ஆய்வு
[ புதன்கிழமை, 21 மே 2014, 11:46.10 PM GMT ]
2003 ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நரேந்திர மோடி, இந்திய தேசிய அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்று யோசனை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னரே மோடி தேசிய அரசியல் குறித்து கவனம் செலுத்தினார். இதனை அண்மையில் அவர் நினைவுப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில் மோடி, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி வருவதையே விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்புக்கள் கூறுகின்றன.
தற்போதைய இலங்கை அரசாங்கம்ää சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கிவருகிறது.
இதன் காரணமாக பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவதாக அமெரிக்கா உணர்கிறது.
ஏற்கனவே சீனா, அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு நிகராக வந்து கொண்டிருப்பதை அமெரிக்காவினால் நேரடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏனெனில் அமெரிக்காவிலும் சீனாவின் அதிக முதலீடுகள் உள்ளன.
எனவே சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவை வல்லரசாக உருவாக்க அமெரிக்கா முனைகிறது.
மறுபுறத்தில் இந்தியாவைக் கொண்டே ரஷ்யாவையும் கட்டுப்படுத்தி விடலாம் என்பது அமெரிக்காவின் நினைப்பாக உள்ளது.
இதற்காக முன்னாள் காங்கிரஸ் அரசாங்கத்தை விட மோடியின் அரசாங்கமே பிரயோசனமான செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
இந்தநிலையில் இலங்கையில் ராஜபக்ச அரசாங்கம் இருப்பதை விட ரணில் அரசாங்கம் இருப்பதையே மெரிக்கா விரும்புகிறது.
இதற்காகவே மெரிக்கா தற்போது முனைப்புக்களிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலை அமெரிக்கா பரீட்சைக் களமாக பயன்படுத்த முனைவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு கூறுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டே இலங்கையின் மஹிந்த அரசாங்கம் முந்திக்கொண்டு மோடியின் அரசாங்கத்துடன் நல்லுறவை ஏற்படுத்த முனைகிறது.
எனினும் தமிழகத்தில் மாநில வல்லரசாக மாறியுள்ள ஜெயலலிதாவினால் மஹிந்தவின் முயற்சி தோல்வி காணச் செய்யப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது.
காங்கிரஸ் அரசாங்கம், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையுடன் நெருங்கிச் செல்வதை தடுத்திருக்க முடியும்.
எனினும் தமது கணவரை கொன்ற விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அழிப்பது மாத்திரமே சோனியா காந்தியின் நோக்கமாக இருந்தமையால், இலங்கையை காங்கிரஸ் அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmt7.html
அரசையும் தமிழ்க் கூட்டமைப்பையும் தீர்வுக்கான பேச்சில் ஈடுபட வற்புறுத்தி அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை!
[ புதன்கிழமை, 21 மே 2014, 07:35.52 PM GMT ]
113 ஆவது காங்கிரஸ் கூட்டத்துக்கென நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ருஷ் ஹோல்ட் என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணை, விடுதலைப் புலிகளுடனான தனது கடந்த கால உறவை ஏற்றுக்கொண்டு, மீள்நல்லிணக்கத்துக்கான தனது பற்றுறுதியை வெளிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோருகின்றது.
ஒஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சிப் பிரதிநிதி பில் ஜோன்ஸன், மஸாசூசெட்டைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ஜோன் டிரேனி ஆகியோரும் இந்தப் பிரேரணையில் ஒப்பமிட்டுள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் இந்தப் பிரேரணை, மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை நடைமுறைப்படுத்தும்படியும் வலியுறுத்துகின்றது.
மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உதவியை நாடும்படி வற்புறுத்தும் இப்பிரேரணை, மீள்நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும்படியும் இலங்கையை வலியுறுத்துகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmt6.html
Geen opmerkingen:
Een reactie posten