தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 mei 2014

இராணுவ பிடிக்குள் இசைப்பிரியா! புகைப்பட ஆதாரம் வெளியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
எனினும் வழமைபோன்று இராணுவம் அதனை மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இனவழிப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
isaipriya_new_001isai_perija_1852009_1isai_perija_1852009_2isai_perija_1852009_4isai_perija_1852009_5
- See more at: http://www.canadamirror.com/canada/26141.html#sthash.ZNyZcry1.dpuf

சிங்கள இராணுவத்தின் பிடியில் இசைப்பிரியா ! இறுதித் தருணம் (புகைப்படங்கள்)
18 May, 2014 by admin
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியாவின் புகைப்படங்களை பாருங்கள் ! மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர்களை உட்கார வைத்துள்ளது இலங்கை இராணுவம். மழை தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு இடத்தில் , நீண்ட நேரம் இவர்களை உடுப்பு இல்லாமல் அம்மணமாக உட்காரவைத்துள்ளது இலங்கை இராணுவம். பின்னர் ஒருவர் பின் ஒருவராக அவர்களை தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளார்கள். காட்டு மிராண்டித்தனமாக சிங்கள இராணுவம் நடந்துகொள்ளும் இந்தப் புகைப்படங்களை பாருங்கள். இதில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவனும் உள்ளான். அவனையும் இலங்கை இராணுவம் விட்டுவைக்கவில்லை. 









http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6851

Geen opmerkingen:

Een reactie posten