தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள்: கோத்தபாய !


முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கெனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இந்த நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் கனடாவில் அடைக்கலம் பெற்று வசித்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
01 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398928270&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten