கைதானவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் ரவைகள், கத்திகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் தமிழர்களா இல்லை சிங்களவர்களா என்பது தொடர்பான விடையங்களை எதனையும் பொலிசார் தெரிவிக்கவில்லை. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மின்னேரியா காட்டில் உள்ள ஹிரிதலே வனத்தில் துப்பாக்கியுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளது என மேலும் தெரியவருகிறது. துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் போன்ற ஆயுதங்களுடன் இவர்கள், இந்த வனப்பிரதேசத்தில் நடமாடுவதாக பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலை அடுத்தே இவர்கள் கைதுசெய்யபப்ட்டுள்ளார்கள். இவர்களை கைதுசெய்ய என விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
http://www.jvpnews.com/srilanka/68642.html
Geen opmerkingen:
Een reactie posten