“இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக இனங் கண்டு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள் மீதான தடையை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென கனடா தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளில் விடுதலைப்புலிகள் அமைப்பும் உள்ளடங்குகின்றது. இந்த அமைப்பை ஏற்கனவே கனடா அரசு தடை செய்திருந்தது. இந்நிலையிலேயே இக்கருத்தையும் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்டுள்ள 16 அமைப்புகள் மற்றும் 424 தனிப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் இராஜதந்திர ரீதியில் தூதரகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது ;
இவ்விடயத்தை கருத்தில் கொள்ளாமல் இக்கூற்றைத் தெரிவித்தனரா எனத் தெரியவில்லை. எனினும் இவ்வமைப்பு தொடர்பில் கனடா அரசு உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகின்றோம். பயங்கரவாதம் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவும் உள்ளது.
இதேபோல விடுதலைப்புலிகள் அமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலும் இவ்வமைப்பை அச்சுறுத்தலான அமைப்பென்றே கருத்தில் கொள்கின்றனர். வேறெந்த நாடும் இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை” என குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/68662.html
Geen opmerkingen:
Een reactie posten