பொலிவூட் ஐஸ்வர்யாவிற்கு இலங்கையில் வழக்கு..
இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயுடன் தான் தொடர்புகொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் இந்திய நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் இலங்கையர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
தற்போது தாய்வானில் வசித்து வரும் நிரோஷன தேவப்பிரிய என்பவரே இவ்வாறு முறைப்பாடொன்றை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பிரபல பொலிவூட் நடிகை ஐஸ்வரியா ராயும் நானும் தொடர்பு கொண்டிருந்தேன். ஆயினும், அவர் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்தமையினால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டேன்.
இவ்வாறு ஏமாற்றப்பட்டதன் பின்னர் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அவ்வாறு உள்ளானதற்காக ஐஸ்வர்யா ராயிடம் நட்டஈடு கோரவேண்டும் என எண்ணினேன்.
அதனடிப்படையில் இலங்கையில் பாணந்துறையில் வசித்து வரும் எனது மருமகனான ரொஷான் அஜித்திடம் இவ்விடயம் குறித்து தெரிவித்தேன்.
இப்பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறிய மருமகன், இலங்கையில் வழக்கு தாக்கல் செய்வதென்றால், சட்டத்தரணிக்கு செலுத்துவதற்கும், வழக்கு சம்பந்தமான மற்றைய அனைத்து செலவுகளுக்கும் 1.7 மில்லியன் ரூபா அவசியம் என்றும் அத்தொகையை தன்னிடம் தருமாறும் கேட்டார்.
அந்த பணத்தை நான் செலுத்தியிருந்தும் அவ்வாறான வழக்கிற்கான எந்தவொரு நடவடிக்கையும் மருமகன் எடுக்கவில்லையென தெரியவந்தது. அதன் பின்னரே இம்முறைப்பாட்டை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மோசடி செய்ததாக கூறப்படும் நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, தான் மோசடி செய்த பணத்தை தவணைமுறையில் திருப்பிக்கொடுப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து ரூ.500,000 இரண்டு சரீரப்பிணையில் அவரை நீதவான் திலின கமகே விடுதலைச்செய்தார்.
தான் மோசடி செய்த பணத்தில் மாதாந்த தவணைக்கட்டணமாக ஒரு மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் காணாமல்போன பெண் 4 நாட்களின் பின் மயக்கத்தில் மயானத்தில்..
யாழ்.புலோலி புளியங்கியான் இந்து மயானத்திற்கு அருகிலிருந்தே இவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்து மயானத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலமொன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்னை மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்டதாக நம்பப்படும் பெண்ணொருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியினில் மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை – கொடிகாமம் வீதியிலுள்ள துன்னாலை மயானத்திற்கு அண்மையாக இந்த வயோதிபப் பெண் இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த பேரின்பநாயகம் தேவகியம்மா (வயது 61) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையினில் கடந்த சனிக்கிழமையன்று குறித்த பெண் தனது வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சிலர் தாம் காங்கேசன்துறை பொலிஸைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறும் கூறிச் சென்றிருந்தனர். இந்தநிலையில் அந்தப் பெண் ஆவணங்களுடன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பெண் அங்கங்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளார். தான் கடத்தப்பட்டு வாகனமொன்றினில் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் தடுத்து வைத்திருந்த இடத்திலிருந்து கடத்தல்காரர்களே குறித்த மயானப் பகுதியினில் வீசிச்சென்றதாகவும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தினில் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten