தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

மே 18க்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கொலை மிரட்டல்..


இலங்கைக்கு எதிராக ஆதரவளித்தமை நியாயமானதே

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தமை நியாயமானதே என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி டேவிட் டாலி இதனைத் தெரிவித்துள்ளார்.

மே 18க்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கொலை மிரட்டல்..

யாழ்ப்பாப் பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக சமூகத்தை எச்சரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் பீடாதிபதி, பேராசிரியர்கள் மாணவத் தலைவர்கள் எனச் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளை இராணுவத்தரப்பே ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது. மே மாதம் யாழ் பல்கலைக்கழக மாவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கொண்டாடுவதைத் தடுக்கவே ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க துணைபுரிவோருக்கு எதிராக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட புலிகளை மீள உயிர்ப்பிக்க முனைவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் ஒன்றியங்களை நீண்ட காலமாக அவதானித்து வந்து எச்சரித்தபோதும் அது பலனளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பேராசிரியர்களின் வழிநடத்தல்களிலேயே மாணவர் ஒன்றியம் இயங்குவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்களும் பீடாதிபதியும் மாணவர்களும் இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவத்துள்ள குறித்த சுவரொட்டி இனி உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளது.
இந்தசுவரொட்டிகளை இராணுவத்தினர் சிவில் உடையில் வந்து ஒட்டியதாகவும் சிலரிடம் இதை விநியோகித்துச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மாவீரர் தினக் காலத்திலும் முள்ளிவாய்க்கால் படுகொலை காலத்திலம் இராணுவத்தினர் இவ்வாறான சுவரொட்டிகளை ஒட்டிப் பல்கலைக்கழக சமூகத்தை மிரட்டுவது வழமையான நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலைக்கழக சமூகத்திற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவு மீண்டும் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளது:-
யாழ்.பல்கலைக்கழக சமூகத்திற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவு மீண்டும் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூருவதை தடுக்க பல்கலைக்கழகத்தை குறித்த காலப்பகுதிக்கு நிர்வாகம் இழுத்து மூடியுள்ளது. இதற்கெதிராக பல்கலைக்கழகத்தினுள்ளே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்தே அவ்வாறு குரல் கொடுக்கும் தரப்புக்களிற்கு எதிராக மிரட்டலை அரச புலனாய்வு கட்டமைப்பு விடுத்துள்ளது.
அம்மிரட்டலில் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் உள்ளது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியமையால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அச்சவுணர்வு ஏற்பட்டுள்ளது.
‘மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது’ என்று தலையங்கம் இடப்பட்டிருந்த மேற்படித் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவை வருமாறு:- அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றது. பேராசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளாக அமைகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது. எனவே பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் உங்களுடைய உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது. – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெயர் குறிப்பிட்டு பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்த சிலருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten