தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்த முனையுமாம் இந்தியா! பாஜக பேச்சாளர்

நவுரு தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள21 பேரின் அகதி அந்தஸ்து பரிசீலிக்க தீர்மானம்
நவுரு தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் 21 பேரின் அகதி அந்தஸ்துக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

asylum seekersகுடிவரவு அமைச்சர் மொரிசன் மேற்கொண்ட அறிவித்தலின் பிரகாரம், நவுரு மற்றும் பப்புவா நியூ கினியாவின் மானுஸ் தீவில் தமது புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஐ எட்டியுள்ளது.

சுமார் 250 பேர் சுயவிருப்பத்தின் பேரில் சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள் எனவும், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது எனவும் .மொரிசன் தெரிவித்தார். 'சமகால அரசாங்கம் ஆட்சிபீடமேறியதைத் தொடர்ந்து Operation Sovereign Borders என்ற திட்டத்தின் கீழ் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதகவும் தற்போது சுமார் 1200பெயர் மாத்திரம் உள்ளதாகவும் ஏனையோர் சுய விருப்பத்தின் பெயரில் நாடுகளுக்கு சென்றுள்ளதாக மொரிசன் தெரிவித்துள்ளார் .
25 May 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401025813&archive=&start_from=&ucat=1&


13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்த முனையுமாம் இந்தியா! பாஜக பேச்சாளர்
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13வது திருத்தத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் பேச்சாளர் நிர்மலா சித்தாராமன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்மலா சித்தாராமன், இலங்கையுடன் அதிகாரப்பரவலாக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்பில் தமது அரசாங்கம், பேசும் என்று குறிப்பிட்டார்.

மோடியின் பதவியேற்புக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்துள்ளதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறித்து கருத்துரைத்துள்ள அவர், சார்க் நாடுகளின் தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்த முடிவு, உரியமுறையில் ஆராயப்பட்டே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
25 May 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401022277&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten