தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி

இலங்கையின் காணிப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பவுள்ளார் ஐ.நா விசேட பிரதிநிதி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 03:28.17 AM GMT ]
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சாலோகா பெயானி (Chaloka Beyani) ஐ.நா மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போதே அவர் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஏற்கனவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக பெயானி கவலை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படாதோர் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இடம்பெயர் மக்களுக்கு நிரந்தரமான ஓர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெயானி கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட அல்லது மீள்குடியேறிய மக்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இதுவரையில் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வாதாரம், சமூக நலன் மற்றும் நிரந்தர வீடுகள் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து இடம்பெயர் மக்களினதும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZksy.html
13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 05:08.28 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த அவரின் அரசாங்கம் முனையும் என்று கட்சியின் பேச்சாளர் நிர்மலா சித்தாரணம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்மலா, இலங்கையுடன் அதிகாரப்பரவலாக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்பில் தமது அரசாங்கம், இலங்கையுடன் பேசும் என்று  குறிப்பிட்டார்.
மோடியின் பதவியேற்பின் போது இலங்கையின் ஜனாதிபதியை அழைப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறித்து கருத்துரைத்துள்ள அவர், சார்க் நாடுகளின் தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்த முடிவு, உரியமுறையில் ஆராயப்பட்டே எடுக்கப்பட்டதாக நிர்மலா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZks2.html

Geen opmerkingen:

Een reactie posten