தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 maart 2014

இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கிளிநொச்சியில் தடுத்து வைப்பு

மனித உரிமை ஆர்வலர்களின் கைது: இலங்கை மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளது: சுதந்திர ஊடக இயக்கம்
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 08:58.08 AM GMT ]
இலங்கையின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களான இன்போர்ம் நிறுவனத்தின் ஆலோசகர் ரூக்கி பெர்ணான்டோ, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிலையத்தின் தலைவர் அருட் தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் எந்த இடையூறுகளை செய்யாது விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
ரூக்கி பெர்ணான்டோ இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக கடும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் தலையிடும் முன்னணி மனித உரிமை ஆர்வலர்.
அத்துடன் ஊடக சுத்நதிரம் உட்பட ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர் என்பதால், தமது சகோதர சமூகத்தின் கௌரவத்திற்கு பாத்திரமானவர். ரூக்கி பெர்ணான்டோ சுதந்திர ஊடக இயக்கத்துடனும் நெருங்கி செயற்பட்டு வருகிறார்.
இவருடன் கைது செய்யப்பட்ட அருட் தந்தை பிரவீன், வடக்கில் மத மற்றும் மனித உரிமைகளுக்காக மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புகள் காரணமாக மக்களின் நன்மதிப்பை பெற்ற மதத் தலைவராவார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச தளத்தில் கடும் கவனம் செலுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், நாட்டில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அடக்குமுறை ஏவி விடப்பட்டுள்ள இந்த சம்பவமானது அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாடும், நாட்டு மக்களும் பாரிய ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த சூழலில், இவ்வாறான சம்பவம் மூலம் நாடு என்ற வகையில் நாம் உலகத்திற்கு வழங்கும் செய்தி மிகவும் அபாயகரமானது.
இதனால் ரெக்கி பெர்ணான்டோ மற்றும் அருட் தந்தை பிரவீன் ஆகிய மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை உடனடியாக நிறுத்தி, இலங்கையில் மனித உரிமைகளையும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுப்பதாகவும் சுதந்திர ஊடக இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVeq1.html

இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கிளிநொச்சியில் தடுத்து வைப்பு
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 12:16.01 AM GMT ]
இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து நேற்று ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் எஸ் ரத்னவேல் தெரிவித்தார்.
இத்தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது.
இவர்களை கைது செய்துள்ளதன் காரணம் கிளிநொச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்ட தாயும் மகளும் விவகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புகின்றோம்.
இவர்கள் இருவரும் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எனினும் இவர்கள் இருவரும் 24 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்படாவிடில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்பலாம்.
அதேவேளை இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையினால் நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது.
இவர்கள் இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டால் குறைந்தது 3 மாத காலத்திற்கு தடுத்து வைத்திருக்கமுடியும்.
எனினும் தெளிவான விபரங்கள் எதுவும் அறியமுடியாதுள்ள நிலையில் இவர்களை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என மனித உரிமை வழக்கறிஞர் ரத்னவேல் மேலும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களை கொழும்பிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முன்னணி மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருகி பெர்னாண்டோ மற்றும் கத்தோலிக்க மதகுரு ஒருவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரவீன் மதகுருவும் தாமும் தனித் தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ருகி பெர்னாண்டே நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
முதலில் இவ்வாறு எவரையும் கைது செய்யவில்லை என கிளிநொச்சி பொலிஸார் சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இருவரை கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVeoz.html

கிளிநொச்சியில் கைதான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 10:44.38 AM GMT ] [ பி.பி.சி ]
கிளிநொச்சியில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த வியாழக்கிழமை தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற தாயாரும், அவருடைய 14 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றது.
காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும் அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.
இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கைது நடவடிக்கையானது, இலங்கை அரசியலமைப்பில் பொதுமக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றது என்று மனித உரிமைகளுக்கும் ஆய்வுக்குமான நிலையமும், நீதியும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பும் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
இந்த அமைப்புக்களின் பணிப்பாளராகிய கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்து தடுத்து வைக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், வலிந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கவும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 48 மணித்தியாலங்கள் ஒருவரைத் தடுத்து வைக்கலாம் என்ற சட்டத்தின் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநாவின் மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரைக் கைது செய்திருப்பதானது, இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டு நிலைமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்ற சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே வழி கோலியுள்ளது என்றும் கீர்த்தி தென்னக்கோன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVer0.html
மனித உரிமை ஆர்வலர்களின் சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - அமெரிக்கா
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 10:59.19 AM GMT ]
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களான ரூக்கி பெர்ணான்டோ மற்றும் அருட் தந்தை பிரவீன் ஆகியோரின் சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்படி இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் முழுமையான சட்ட ஆலோசனைகள் தொடர்பான முழு அணுகலை பெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை கிளிநொச்சியில் நேற்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த மனித உரிமை ஆர்வலர்கள் வவுனியா அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கு மத்தியில் ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்தமை மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVer1.html

Geen opmerkingen:

Een reactie posten