தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 maart 2014

முக்கியமான தருணத்தில் இந்த காணொளியை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை: கெலம் மக்ரே


முக்கியமான தருணத்தில் இந்த காணொளியை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்று சனல்4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ உண்மையானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீடியோவை கொடுத்தவரையும் சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள படங்களை வீடியோ நிபுணர்களிடம் கொடுத்து சுயேச்சையான வழியில் ஆய்வு செய்து நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
)
இந்த வீடியோ வெளியான நேரமும் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது வாக்களிக்க உள்ள நாடுகளில் வீடியோ வெளியானதும் தற்செயல் நிகழ் வாகும். அண்மையில்தான் வீடியோ கிடைத்தது. அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க சில காலம் பிடித்ததாகவும் மக்ரே தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இதை வெளியிடுவதை தலைகுனிவான செயலாக நான் பார்க்கவில்லை. முக்கியமான தருணத்தில் இதை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்றார் மெக்ரே.
சீருடை அணிந்த நபர்கள் சடலங்கள் மீது ஏறி சிங்களத்தில் பேசியபடி கொண்டாடுவது பதிவாகி இருக்கிறது. பெண் விடுதலைப்புலிகளின் சடலங்கள் இவை என விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten