தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 maart 2014

ஜெயலலிதா எச்சரிக்கைக்கு அடி பணிந்ததா இலங்கை?


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்கு அடி பணியும் வகையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால், கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில மணி நேரங்களில் இலங்கை அரசாங்கம் 116 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது. ஊர்காவற்துறை நீதவான் லெனின் குமார் இன்றைய தினம் 116 இந்திய மீனவர்களையும், 27 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 177 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 116 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இலங்கைக்குள் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten