தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 maart 2014

இலங்கைக்கு எதிரான பிரேரணை நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலானது - அரசாங்கம்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது: பிரான்ஸ்
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 01:02.07 PM GMT ]
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கொழும்பில் உள்ள தூதரகம் மூலம் தமது அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும்.
அனைத்து சூழ்நிலைகளிலும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை உறுதியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறோம் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
திருத்தப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையில் இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRVLWmr5.html
இலங்கைக்கு எதிரான பிரேரணை நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலானது - அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 01:37.42 PM GMT ]
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பிரேரணை இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலானது என ஐ.நா மனித உரிமை பேரவையின் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளிடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு ஜெனிவாவில் நேற்று முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளிடம் இலங்கை தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளனர்.
ஆயுத மோதல்களுக்கு பின்னர், நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பவதில் இலங்கை முன்னேற்றமான உறுதியான வழிமுறைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க, முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மனசாட்சியின் படி செயற்படும் சுதந்திரம், மத சுதந்திரம் உட்பட அடிப்படை சுதந்திரங்கள் இலங்கையின் அரசியல் அமைப்பின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இலங்கை பலமொழி, பல்லின, பலமத கலாசாரங்களை கொண்டுள்ளது. இலங்கையின் வலிமையான தேசிய அடையாளமாக இது கருதப்படுகிறது.
எனினும் தேவையில்லாமல் மத விரோத சம்பவங்கள் எனக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து மனித உரிமை பேரவையில் கவனம் செலுத்துவது இலங்கையில் தற்போதுள்ள நிலைமைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது சமூகங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்தும்.
இது அரசியல் நோக்கம் கொண்டது மட்டுமல்லாது தேசிய நல்லிணக்கத்திற்கு தடையாகவும் அதனை குறைமதிப்புக்கும் உட்படுத்தும்.
பிரேரணையை அரசியல் நோக்கங்களை அடையவும் பேதங்களை உருவாக்கும் நோக்கங்களை கொண்டது என்பது தெளிவானது.
விடுதலைப்புலிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளனர். காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதல் நடத்தியிருந்தனர்.
வடக்கில் இன சுத்திகரிப்பை மேற்கொள்ளும் முயற்சியாக அங்கிருந்த முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை வெளியேற்றினர்.
இந்த தவறுகள் சரி செய்யப்பட்டு சகல இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணை என்ற பெயரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையை தொடங்கும் அரசியல் உந்து சக்தியை தோற்கடிப்பதில் முஸ்லிம் நாடுகள் இலங்கையுடன் உள்ள தமது ஒற்றுமையை காட்ட வேண்டும் எனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRVLWmr7.html

Geen opmerkingen:

Een reactie posten