தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 maart 2014

ஜெனீவாவில் ரகசியமாக சில தமிழர்கள் ஜி.எல் பீரிசை சந்திக்க இருக்கிறார்கள் ?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்று ஜெனீவா சென்றுள்ளார். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள், குழுவின் தலைவர்களை, அமைச்சர் பீரிஸ் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதேவேளை அவர் ஜெனீவாவில் சில தமிழர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இன்று மாலை ஜெனிவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 

சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் தான் இச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் சில புல்லுருவிகளே இச் சந்திப்பில் ஈடுபடவுள்ளார்கள். மேலும் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்களின் செயல்பாடு, மற்றும் அமைப்புகளின் வீரியத்தன்மை தொடர்பாக இவர்கள் சில தகவல்களை ஜி.எல்.பீரிசுக்கு வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. மிகவும் ரகசியமான முறையில் இச் சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு இச் செய்தி கசிந்துவிட்டது. இதனால் இச் சந்திப்பு பிற்போடப்படலாம் இல்லையென்றால் பிறிதொரு இடத்தில் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும் இவ்வாறு ஒரு சந்திப்பு நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொண்ட அனைத்து தமிழர்களது பெயர்களும் அதிர்வில் வெளியாகும்.

04 March, 2014 by admin

Geen opmerkingen:

Een reactie posten