http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6482
விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினரான ஜெயவதனியை வைத்து, இலங்கை அரசு ஆவணப் படம் ஒன்றை தயாரித்துள்ளது. "த லாஸ்ட் பேஸ்" [Last Phase] அதாவது இறுதிக் கட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. புலிகளால் பராமரிக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்ததாகச் சொல்லப்படும் ஜெயவதனி என்னும் பெண்ணே இதில் நடித்துள்ளார். புலிகள் சிறுவர் இல்லங்களை பராமரித்து வந்தது அவர்களை போராட்டத்தில் இணைக்கவே என்பது போலவும், அவர்கள் கட்டாயமாக ஆள்சேர்பில் ஈடுபட்டதாகவும் இந்த ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப் போரில் புலிகளே போர்குற்றங்களைப் புரிந்ததாகவும், மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியில் அவர்கள் கனரக ஆயுதங்களை வைத்துப் பாவித்ததால் அவர்கள் மீது குண்டுபோடவேண்டிய சூழ் நிலை தோன்றியதாகவும் இலங்கை அரசு தன்னை நியாப்படுத்தி இப் படத்தில் காட்டியுள்ளது.
இவை அனைத்திற்கும் இந்தப் பெண் போராளி ஆதாரம் என்று இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை சனல் 4 கின் கொலைக் களங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் களமிறக்கியுள்ளது. அத்தோடு நின்றுவிடாமல் சமீபத்தில் பிரித்தானிய பாராளு மன்ற வழாகத்திலும் பல எம்.பீக்களுக்கு இதனை இலங்கை தூதுவராலயம் போட்டு காட்டியுள்ளது. இதேவேளை இதனை தற்போது இவர்கள் ஜெனீவாவுக்கும் எடுத்துச் சென்றுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமை மாநாடு நடக்கும் கட்டத்தினுள் உள்ள கேட்போர் கூடத்தில், பல அறைகள் உள்ளது. அதனை தனியாகா வாடகைக்கு எடுக்க முடியும். இவ்வாறு கேட்போர் கூடத்தில் உள்ள அறைகளை எடுத்து அதில் இந்த ஆவணப்படத்தை இலங்கை அரசு பல வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் காட்ட முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, பிரித்தானியா போன்ற நாடுகளில் இளையோர்களை வளைத்துப் போடும் ஒரு பாரிய நடவடிக்கையிலும் இலங்கை அரசு இறங்கியுள்ளது. திறமையுள்ள இளையோர்களை பேஃஸ் புக் மூலம் அணுகும் ஒரு கும்பல் , அவர்களின் திறமை என்ன என்று பார்த்து, அவர்களுக்கு உதவுகிறார்கள். உதாரணமாக பாட்டு பாடக்கூடிய ஒரு தமிழ் இளைஞரை அணுகி நீங்கள் ஒரு "ஆல்பம்" செய்ய நாம் உதவுவோம் எனக் கூறி அவர்களை வளைத்துப் போடுகிறார்கள். பின்னர் நாம் ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் இருக்கவேண்டும், பிரிவினை எமக்குள் கூடாது என்று மூளைச் சலவை செய்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இதில் சில இளையோர்கள் ஏற்கனவே சிக்கியும் விட்டார்கள். இது மிகவும் ஒரு ஆபத்தான விடையமாக பார்கப்படுகிறது.
தற்போது எமது விடுதலைக்காகப் போராடி வரும், செயல்பாட்டாளர்கள் பலர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இன்னும் சில வருடங்களில் அவர்களின் வீரியம் குறைந்துவிடும். அடுத்த தலைமுறை(இளையோர்களே) எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசு தற்போது வெளிநாடுகளில் உள்ள இளையோர்களை தம் பக்கம் இழுக்கும் பாரிய நடவடிக்கை ஒன்றை முடுக்கி விட்டுள்ளது. அப்படி இழுக்க முடியவில்லை என்றால் கூட, பிரிவினை வேண்டாம் ஒன்றாக வாழலாம் என்ற கருத்தை அவர்கள் மனதில் மெல்ல மெல்ல விதைத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ் பெற்றோர்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும் என நாம் தாழ்மையோடு வேண்டி நிற்கிறோம். இலங்கை அரசின் ஏற்பாட்டில், பேஃஸ் புக், மாணவர் அமைப்புகள், களியாட்ட விடுதிகள், ஊடாகவே இந்தப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten