இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு !
17 March, 2014 by admin
யுத்தத்தின் போது எவ்வாறு படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது பற்றி இராணுவச் சீருடை தரித்த படைவீரர் ஒருவர் விபரிப்பதாக இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இரண்டு தரப்பினரும் நிராகரித்திருந்தனர்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6538
இரசாயன ஆயுதங்களை சிறிலங்கா படைகள் பயன்படுத்தின- புதிய ஆதாரம் !
17 March, 2014 by admin
இலங்கையில் தமிழின அழிப்பில் சிறிலங்கா அரச படைகள் தமிழர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கு ஆதாரமாக மேலும் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய செய்தியை இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் நியூஸ் எக்ஸ் லைவ் எனப்படும் செய்தி சேவை தெரிவித்துள்ளது.செய்தியில் தமிழ் இன அழிப்பில் சிறிங்கா அரச படைகளால் உலக போர் வரலாற்றில் பயன்படுத்த கூடாது என்று தடை செய்யப்பட்ட இராசய ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவ அதிகாரி ஒருவரே ஒப்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் ஒரு கிலோ மிட்டர் சுற்றளவுக்கு தாக்கி மனித உயிர்களை கொல்ல கூடியன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான ஆதரங்களுடனான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இரசாயன ஆயுதங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6542
Geen opmerkingen:
Een reactie posten