தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 maart 2014

மோடி பிரதமராக தெரிவானால் இலங்கைத் தமிழ் மக்களை பாதுகாப்பார் – வைகோ !

இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானி தலைமையில் டில்லியில் இன்று வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்தியா முழுவதும் “மோடி அலை” வீசுவதாக தெரிவித்த அவர், சட்டத்தரணிகள் அனைவரும் நரேந்திர மோடி பிரதமராக தெரிவு செய்யப்படுவதையே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இலங்கை தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என வைகோ தெரிவித்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6539

Geen opmerkingen:

Een reactie posten