இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளன.
இந்த தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்த உரிய அதிகாரி ஒருவரையோ அல்லது நிபுணர் குழு ஒன்றையோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 28ம் திகதி நவனீதம்பிள்ளை தனது தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொடர்பில் விசாரணை குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி நவனீதம்பிள்ளைக்கு தொலைபேசி மூலம் சிலர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறான உரிய அதிகாரியோ அல்லது நிபுணர் குழு ஒன்றே நியமிக்கப்படுவதனை எதிர்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவைக்கு 500 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தும் காலம் வந்துள்ளது – நவநீதம்பிள்ளை
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான காலம் வந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.
ஆனால் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய பதில்களை அரசாங்கம் வழங்க தவறி இருக்கிறது.
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் தமது சொந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
http://news.lankasri.com/show-RUmsyDTbLVjpy.html
மொரீசியல் தீவு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேவ விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் கைக்கோர்த்துள்ளது.
மொரீசியஸ் ஜெனிவாவில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பு- இலங்கை அரசாங்கம் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014, 01:44.52 AM GMT ]
இந்த நிலையில் மொரீசியசுக்கு இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் கண்டனம் தெரிவித்திருப்பதாகää இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல் பாதுகாப்பு மாநாட்டில் மொரீசியஸ{ம் சீசெல்சும் பார்வையாளர்களாக பங்கேற்றிருந்தன.
பெரும்பாலும் இந்த குழுவில் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான போக்கினை மொரிசீயஸ் கொண்டுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
http://news.lankasri.com/show-RUmsyDTbLVjp3.html
Geen opmerkingen:
Een reactie posten