தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 maart 2014

தமிழ் பெண்களின் அழகு தொடர்பில் இராணுவத்தினருக்கு ஏன் இந்த அக்கறை?

யாழ். கரையோரப்பகுதி இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்க முயற்சி!

யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர் என்று கரையோரப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.கொழும்புத்துறை, மணியந்தோட்டம், குருநகர், பாஷையூர், நாவாந்துறை ஆகிய பகுதிகளில் க.பொ.த.(சா.த.) பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களை குறிவைத்து அவர்களது வீடுகளுக்குச் செல்லும் படையினர் அவர்களை இராணுவத்தில் இணையுமாறும் இதனால் பலநன்மைகள் கிடைக்கும் எனவும் ஆசை காட்டி வருகின்றனர் என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தில் இணைந்தால் அதிக சம்பளம் பெறலாம். வீட்டின் கஷ்டங்கள் தீரும். உங்களை இராணுவத்தின் சிவில் விடயங்களைக் கவனிக்கக் கூடியவர்களாக உருவாக்குவோம் என்று இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆசைகாட்டி இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை சம்மதிக்க வைத்த பின்னர், அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் கல்வி கற்ற பாடசாலைக்கு நேரில் செல்லும் இராணுவத்தினர் இளைஞர்களின் விடுகைப் பத்திரம் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களை வழங்குமாறு அதிபர்களிடம் கோரிவருகின்றனர் என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/62767.html

தமிழ் பெண்களின் அழகு தொடர்பில் இராணுவத்தினருக்கு ஏன் இந்த அக்கறை?

கடந்த 13.03.2014 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு 25க்கும் மேல்பட்ட பெண்களை அழைத்த இராணுவத்தினர், அவர்களுக்கு ஒப்பனை (மேக்கப்), மற்றும் முகச்சீரமைப்பு (பேசியல்) அழகு சாதனப்பொருள்களை வழங்கியுள்ளனர்.
முள்ளியவளை, கணுக்கேணி, மாமூலை, நீராவிப்பிட்டி, வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு 12.03.2014 அன்று சென்ற இராணுவத்தினர், 20 முதல் 40 வயது வரையான பெண்களை நாளை (13.03.2014) 2.00 மணிக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு வருமாறும், பரிசுப்பொருள்கள் வழங்க இருப்பதாகவும், போக்குவரத்து ஒழுங்குகள் (இலவச பேரூந்து வசதி) செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிச்சென்றுள்ளனர்.
மறுநாள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட 25க்கும் மேல்பட்ட பெண்களுக்கு இராணுவ அதிகாரிகள், ஒப்பனை (மேக்கப்), மற்றும் முகச்சீரமைப்பு (பேசியல்) அழகு சாதனப்பொருள்கள் அடங்கிய பொதிகளை வழங்கியுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/62770.html

Geen opmerkingen:

Een reactie posten