குறித்த பெண் தனது தாய் மற்றும் குழந்தையுடன் கடந்த 08ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய மாமனாரின் வீட்டுக்கு வந்துள்ளார். இரண்டு நாட்களில் குறித்த இளம் பெண்ணின் தாயார் அவருடைய இரண்டரை வயது பேரக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு மட்டக்களப்பிலுள்ள வீடு திரும்பிய நிலையில் நுகேந்தா தனது மாமனாருடன் 14ம திகதி வெள்ளிக்கிழமை மாலை பஸ்ஸில் சென்றுள்ளார்.
பயணத்தின் போது ஹபரணைப்பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் இரவு உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்ட வேளை தான் பஸ்ஸில் இருப்பதாகக்கூறவே மாமனார் உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடைக்கு சென்று அவர் உணவு அருந்திவிட்டு வந்த வேளை பஸ்ஸில் குறித்த பெண் இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில் எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

http://www.jvpnews.com/srilanka/62773.html
Geen opmerkingen:
Een reactie posten