தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 maart 2014

பொற்கோயில் விசாரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும்: பிரித்தானியாவிடம் கோரிக்கை

மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகம் விநியோகம்
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 01:09.03 AM GMT ]
மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு பாடசாலைகளுக்கு விநியோகம் செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலதிக வாசிப்புப் புத்தகமாக இது வெளியிடப்பட உள்ளது.
மனித உரிமை தொடர்பிலான இந்த பாடப் புத்தகங்கள் சகல பாடசாலைகளுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரது ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் இந்த நூல் எழுதப்பட உள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதி துணை வேந்தர் பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா உள்ளிட்ட புத்திஜீவிகளினால் இந்த நூல் எழுதப்பட உள்ளது.
தரம் ஐந்துக்கு மேல் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் ஆரம்ப பாடசாலை மாணவ மாணவியருக்கும் மனித உரிமைகள் குறித்த புத்தகமொன்றை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொற்கோயில் விசாரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும்: பிரித்தானியாவிடம் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 04:01.52 AM GMT ]
இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற தமிழர்களின் கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு ஆதரவு வழங்குதைப்போன்று 1984 ஆம் ஆண்டு சீக்கிய பொற்கோயில் படுகொலை விசாரணைக்கும் பிரித்தானியா ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இந்திரஜித் சிங் பிரபு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சீக்கியர் சமூகம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
பொற்கோயில் முற்றுகை முடிவடைந்து 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த விவாதம் இடம்பெற்றது. பொற்கோயில் முற்றுகையின் போது சுமார் 2ஆயிரம் அடியார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரியில் கருத்து வெளியிட்டிருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொற்கோயில் படுகொலைகளின் போது பிரித்தானியாவின் ஆதரவு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார.
எனினும் இது தொடர்பில் பொது விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten