தமிழ்பெண்களை மட்டும் இராணுவத்தில் இணையுமாறு கோரும் துண்டுப்பிரசுரங்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, பூதன்வயல், குமுளமுனை, கூழாமுறிப்பு, கேப்பாப்புலவு, முத்தையன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதிகளில் பரவலாக படையினர் விநியோகித்துள்ளனர்.
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் இறுதி நாள் இம்மாதம் 31ம் தினதி என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், மாவட்டத்தின் பல இடங்களிலும்இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை முள்ளியவளை பிரதேசத்திலுள்ள பிரிகேடியர் தர படை அதிகாரியொருவர் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து பேர் வீதம் தமிழ் பெண்களை இராணுவத்துக்கு இணைத்துத் தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:
Een reactie posten