திருட்டுக் குற்றச்சாட்டில் தம்மால் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு சிரிய போராளிகள் கையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அலெப்போ நகருக்கு அண்மையிலுள்ள வடநகரான மகனாஷிலேயே மேற்படி நபருக்கு கையைத் துண்டாக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தண்டனையை நிறைவேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். போராளி குழு திருட்டுக் குற்றச்சாட்டில் தம்மால் பிடிக்கப்பட்ட நபகருக்கு உடனடியாக தண்டனை வழங்கியதன் மூலம் அவரது பாவம் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கண் கட்டப்பட்டிருந்த குறிப்பிட்ட நபரின் கை மேசையொன்றின் மீது வைக்கப்பட்டு வெட்டப்படும் காட்சி டுவிட்டர் உள்ளடங்கலான இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6471


Geen opmerkingen:
Een reactie posten