தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 maart 2014

ஐ.நாவில் இலங்கையைக் காப்பாற்ற இறுதிக்கட்ட சமரில் இந்தியா! தமிழருக்கு ஆப்பா??

ராஜபக்ச அரசாங்கத்தைப் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்ற, அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
வொசிங்டனில் இந்திய இராஜதந்திரி தேவ்யானி கோப்ரகடே, கைது செய்யப்பட்ட விவகாரத்தால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து, கடந்த 4ம் நாள் தொடக்கம் 6ம் நாள் வரை நிஷா பிஸ்வால் இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
தேவ்யானி விவகாரத்துக்குப் பின்னர், இந்தியா சென்று முதல் அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதி இவராவார்.
புதுடெல்லியில் இவர், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், மற்றும், வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது, சிறிலங்கா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.
இதன்போதே, தமிழர்களுக்கு கொழும்பு போதுமானளவுக்குச் செய்யவில்லை என்று வொசிங்டனும், புதுடெல்லியும் ஒப்புக் கொண்டுள்ளன.
அத்துடன், இது நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யலாம் என்றும், ஒருகுடும்ப ஆட்சி சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக உள்ளது என்றும் இருநாடுகளும் தெரிவித்துள்ளன.
ஆனாலும், ராஜபக்சவின் ஆட்சி போர்க்குற்றங்களுக்கப் பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா வாதிட்ட போதும், புதுடெல்லியினது கருத்து வேறுவிதமானதாகவே இருந்தது.
இந்த விடயத்தில் கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று புதுடெல்லிக்கு, தமிழ் நாட்டில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், தாம் செல்வாக்கை இழந்து விட்டால், அந்த இடைவெளியை சீனா நிரப்பி விடும் என்ற பாதுகாப்புக் கவலை அதற்கு உள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நடக்கவுள்ள வாக்கெடுப்பில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்ற போதிலும், புதுடெல்லி இன்னமும் தனது நிலையை வெளிப்படுத்தவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/62393.html

Geen opmerkingen:

Een reactie posten