இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் நான் கலந்துகொள்வேன் என்று அறிவித்த போது தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல்கள் தான் பதிலாகக் கிடைத்திருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போரின் இறுதிக் கால கட்டத்தில் இடம்பெற்றதான போர்க்குற்றங்கள் தொடர்பான தமது ஆவணப்படங்கள் குறித்து கெலும் மக்ரே எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கெலம் மக்ரேயின் கட்டுரை
இந்த ஆவணப்படங்கள் வெளிப்படுத்தும் இறப்புகளின் அளவுகள் மட்டுமல்ல ஒரு போரின் போது 5 பேரின் சாவு சின்ன விடயம் தான். அது 40 ஆயிரம் பொது மக்கள் கடைசி மாதங்களில் மோதலில் அரச தரப்பு மேற் கொண்ட செல் வீச்சினால் கொல்லப்படும் அளவுக்கு மேல் நோக்கி சென்றிருந்தது
இந்தப் படத் தொகுப்புகள் மிக வெறுப்பூட்டுபவையாக இருக்கின்றன. பெண் போராளிகளின் உடல்கள் தொடர்பாகப் படையினர் நடந்து கொண்டுள்ள முறைகள், ஒரு முறை சார்ந்த மிருகத்தனமான கலாசாரம் மற்றும் பால்நிலை வன்செயல்களை அவை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தப் படங்களைக் கைத் தொலைபேசியில் ஒரு சிப்பாய் எடுத்திருக்கிறார். அதில் சிங்களம் பேசும் படையினர் காணப்படுகிறார்கள். அவர்களின் உடைகள் ஒரு விசேட அணியைச் சேர்ந்தவர்களாகக் காட்டுகின்றன. அவர்கள் சிரிக்கிறார்கள், ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள் – புலிப் போராளிகளின் சாவுகளை கொண்டாடுகிறார்கள். சடலங்களின் மீது அசிங்கமான பால்நிலை வன் செயல்களை மேற்கொள்கிறார்கள்.
போராளிகள் போன்று தோன்றும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் எமக்குத் தெரியாது.
ஆதாரங்கள் உண்மையானவை
இந்தப்படங்களை பிரபல்யமான விஞ்ஞான முறையில் ஆய்வுகள் செய்பவரான டாக்டர் றிச்சார்ட் யப்பர்ட் பரிசோதனை செய்துள்ளார். சடலங்களில் காணப்படும் காயங்கள் உண்மையானவை. இப் படத் தொகுதி போலியானவையல்ல என்று முடிவுக்கு அவர் வந்தது மட்டுமன்றி அந்தக் காயங்கள் போரின் போது ஏற்பட்டவையாக தெரியவில்லை.
இது போரின் பின்னர் அல்லது ஒளித்திருந்து தாக்கிய போது ஏற்பட்டவை போல் காணப்படுவதாக அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.
இந்த சடலங்களில் குறைந்தது இரண்டின் மீது காணப்பட்ட காயங்களை – தலைகளில் ஏற்பட்டிருந்த அழமான காயங்களை அவரால் அடையாளம் காண முடிந்தது. உயர் வேகத் துப்பாக்கி வேட்டுகளால் இவை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் – காயங்களின் ஒழுங்கைப் பார்க்கும்போது இவை கொலை செய்யப்படுவதற்கான வேட்டுகள் என்பதை தம்மால் ஒதுக்க முடியாது என்றும் கூறினார்.
பிரிட்டிஷ் தமிழ் பேரவையினால் எமக்கு வழங்கப்பட்ட வீடியோ படங்களும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்குப் பணியாற்றுகிறவரான கௌரவமான ஒரு டிஜிட்டல் பட ஆய்வாளரால் சுதந்திரமாக பரிசோதிக்கப்பட்டு உண்மையானவை என்று காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரதியாக விரிவான ஆய்வின் பின்னர் அவர் கூறினார். ”எதுவித சோடிப்புகளை யோ, கையாடல்களையோ என்னால் காண முடியவில்லை இந்த வீடியோப் படங்கள் உண்மையானவை என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளன. காட்டப்படும் சம்பவங்களை அவை சரியாக பிரதிபலிப்பவையாக உள்ளன என்று கூறினார்.
பால்நிலை கொடுமைகள்
இப்படி தொகுப்பில் மிகத் தெளிவாக உள்ளது என்னவென்றால் பால்நிலை கொடுமைகள்தான் பெண்களின் உடல்கள் – ண்களின் உடல்கள் அல்ல -உடைகள்களையப் பெற்று மீண்டும் மீண்டும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகளும் மோசமான போர்க்குற்றங்களை – சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியது பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசியது போன்றவைகளை செய்துதான் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனது சொந்த செயல்களை நியாயப்படுத் துவதற்கு அரசு இவைகளைப் பயன்படுத்த முடியாது.
புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியா உடைகள் களையப் பெற்று கொல்லப்பட்டதான படங்களை நாம் வெளியிட்ட போது, மோதலின் இடையில் சிக்கி அவர் உயிர் இழந்ததாக அரச தரப்பினர் விடாப்பிடியாக கூறி வந்தார்கள். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் படைகளினால் உயிருடன் பிடிபட்டிருக்கும் படம் எமக்கு கிடைத்தது. அவர் ஆயுதம் இல்லாமலிருந்தார் – உயிருடன் காயமின்றி காணப்பட்டார்.
இசைப்பிரியா மோதலின் போது இடையில் சிக்கி சாகவில்லை. அரச படைகளின் காவலில் இருந்தபோது அவர் இறந்துள்ளார்.
அந்த அடிப்படையில் தான் இப்பொழுது கிடைத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும். ஒரு முறையான திட்டவட்டமான வகையில் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டு கொலைகள் நடைபெற்றுள்ளன. இலங்கையில் இருப்பதாகக் கூறப் படுவது போல் ஒழுக்கமும் செயன்முறையும் கொண்ட ஒரு இராணுவத்தில் இந்த மாதிரி செயற்பாடுகளுக்கு கட் டளையிடும் பொறுப்பானது மிக உச்ச நிலை வரைக்கும் தடயங்களை காண முடியும்.
இதன் கருத்து என்னவென்றால் அது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வரைக்கும் செல்கிறது மற்றும் ஆயுதப் படைகளின் சகல நிலைக் கட்டளைத் தளபதியான அவரது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நோக்கியும் போகின்றது.
http://www.jvpnews.com/srilanka/62411.html

Geen opmerkingen:
Een reactie posten