தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 maart 2014

மகாசிவராத்திரி தினத்தில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே நேற்றிரவு கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி தினமான கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலியின் பாற்பண்ணை என்ற பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் இருந்தவேளை யாரும் இல்லாத சமயம் குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச்சம்பத்துடன் தொடர்புடைய நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினரைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
http://news.lankasri.com/show-RUmsyDTWLVmt0.html

யாழ் நகர விடுதிகள் திடீரென சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 02 மார்ச் 2014, 11:58.44 AM GMT ]
யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் செய்யும் நோக்குடன் பெண்கள் தங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் யாழ்.பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கிய குழுவொன்று தேடுதல் நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டது.
இதன்போது யாழில் உள்ள மூன்று விடுதிகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்டன. குறித்த விடுதிகளில் தவாறான நோக்குடன் தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் கைதாகியுள்ளனர்.
இதேவேளை யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதியில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten