ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 25 வது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அதன் அனுசரணையில் வெளியாகியுள்ள புத்தகம் மூலம் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அந்த தொலைக்காட்சி மறுத்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி ஊழல் ஊடகவியலை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குறித்த புத்தகம் மூலம் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பெரும் அட்டூழியங்களை ஆதாரங்களுடன் ஒளிப்பரப்பி வருகிறது.
இதற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியிலான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிகளை பார்த்து உண்மையில் அதிர்ச்சியடைந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடந்த சகல போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த சர்வதேச விசாரணைக் குழு உருவாக்கப்பட வேண்டும் என இது குறித்து கவனம் செலுத்தியிருந்த ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
இவ்வாறான சூழ்நிலையில், ஊழல் ஊடகவியல், சனல்- 4 மற்றும் இலங்கை என்ற தலைமைப்பில் 222 பக்கங்களை கொண்ட புத்தகம் ஒன்றை தயாரித்து, சனல் 4 இழிவுப்படுத்தும் வகையிலும் போர்க்குற்றங்கள் குறித்த முறையான அறிக்கையை ஒடுக்கும் நோக்கிலும் இலங்கை அரசாங்கத்தின் பிரசார இயந்திரங்கள் சர்வதேச ரீதியில், ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் மத்தியில் விநியோகித்து வருகின்றன.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார், அதற்கான நிதி ஆதாரங்கள் எப்படி கிடைத்தன என்பது குறித்து வெளியிடப்படவில்லை என்பது அந்த தகவல்கள் மர்மாக உள்ளன.
ஊடகவியலை தவறான வழிநடத்தும் இந்த நடவடிக்கைக்கு எதிராக சனல் 4 தவறான உண்மை என்ற தலைப்பில் 20 ஆயிரம் வார்த்தைகளை கொண்ட புத்தக வடிவத்திலான மறுப்பை வெளியிட்டள்ளது.
இந்த புத்தகத்தை சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே எழுதியுள்ளார்.
கெலும் மக்ரே, றோயல் தொலைக்காட்சி சங்கம், சர்வதேச ஒளிப்பரப்பாளர்கள் சம்மேளனம், சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல அமைப்புகளின் விருதுகளை பெற்ற ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளராவார்.
அத்துடன் அவர் அமெரிக்காவின் மிக முக்கியமான இரண்டு தொலைக்காட்சிகளின் ஊடகவியலுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர் சாட்சியங்கள் இல்லாத போர். ஆனால் அங்கு நடைபெற்ற காட்சிகள், பயங்கரமான நிகழ்வுகள் படமாக்கப்பட்டுள்ளன.
கோரமான இந்த போர்க்குற்றங்களை படமாக்கியது யார், இலங்கை அரசாங்கத்தின் படையினர். குற்றம் செய்தவர்கள் இருவர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த காணொளி ஆதாரங்களை ஆய்வு செய்த நிபுணர்கள் சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி ஆதாரங்களை உண்மையானது என அங்கீகரித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சியின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான காணொளி ஆதாரங்கள் போலியானது என வலியுறுத்தி வருகிறது.
எனினும் சனல் 4 ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட சுயாதீன தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக தனது ஆதாரங்களை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten