இந்தியாவில் விடுதலைப்புலிகளின் மீதான தடையை ஐந்து வருடத்துக்கு நீடிப்பது குறித்த விசாரணை செய்யும் மக்கள் தீர்ப்பாயத்தில், இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இன்று சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
விடுதலைப்புலிகளின் மீது 2014 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதியில் இருந்து 5 வருடத்தடை விதிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சு இந்த சாட்சியத்தை வழங்கியது.
மக்கள் தீர்ப்பாயத்துக்கு தலைமை வகிக்கும் நீதிபதி ஜி.பி.மிட்டால் இந்த சாட்சியத்தை பதிவு செய்தார்.
உள்துறை அமைச்சின் சார்பில் மேலதிக சொலிஸ்ட்டர் ஜெனரல் சஞ்சே ஜெயன் யோகேஸ் கண்ணா இந்த சாட்சியத்தை வழங்கினார்
இந்தநிலையில் விசாரணை நாளையும் தொடரவுள்ளது.
இதேவேளை விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வை.கோபாலசுவாமி, இன்றைய சாட்சியத்தின் போது 2012 ஆம் ஆண்டு மூன்று விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டமையை மத்திய அரசாங்கம் தமது சாட்சியத்தின் போது ஆதாரமாக முன்வைத்ததாக குறிப்பிட்டார். எனினும் இதற்காக உரிய ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
தமிழ் தாயகத்தை கோரி போராடியவர்கள் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தையேனும் கோரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViu2.html
Geen opmerkingen:
Een reactie posten