தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 september 2014

ஐ.நா. ஆணைக்குழு விசாரணை! இடமளித்தால் தவறான முன்னுதாரணமாகி விடும்: இலங்கை வாதம்!



ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இலங்கையில் இடமளித்தால், அது ஏனைய நாடுகளுக்கான தவறான முன்னுதாரணமாகி விடும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்துகின்றது.
இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் பலமுறை விவாதிக்கப்பட்டுவிட்டது. தனியான விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது. 
எனினும் இது தொடர்பில் இலங்கையினுள் விசாரணைகளை மேற்கொள்ள இதுவரை இடமளிக்கப்படவில்லை.
எனவே இலங்கை அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள இலங்கையின் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான இந்த விசாரணை எதுவித பலனும் தராது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற விசாரணைக்கு இடமளிக்கும் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏனைய நாடுகளும் தண்டிக்கப்படுவதற்கான காரணியாக அமைவதற்கு இலங்கைக்கு விருப்பமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten