தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

ஊவா மாகாணத்தில் பிரசாரங்களில் ஈடுபடும் 26000 அரச பணியாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: ஜே.வி.பி முறைப்பாடு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்!-அரசியலிலிருந்து ஓய்வு பெறுவேன்!-ஹரின் எச்சரிக்கை -
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:17.21 PM GMT ]
ஊவா மாகாணசபை தேர்தல் பிரசாரங்களின் போது பொலிஸாரும் அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு வாய்ப்பை தேடிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், ஆளும் கட்சியின் தேர்தல் விளம்பரங்களை அகற்றாது தமது கட்சியின் விளம்பரங்களை மாத்திரம் அகற்றினால் தாம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக ஹரின் எச்சரிக்கை விடுத்தார்.
ஆளும் கட்சியினரை போன்றே தாமும் கட்சியின் தேர்தல் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதாக ஹரின் கூறினார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வவேன் - ஹரின்
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை முதலமைச்சர் வேட்hளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் பேசவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஆரம்பித்த அரசியல் வாழ்க்கையை ஐக்கிய தேசியக் கட்சியிலேயே முடித்துக்கொள்வேன்.
எனக்கு எதிராக தொடர்ச்சியாக சேறு பூசி வரும் பததிரிகையொன்று நமால் ராஜபக்சவை சந்தித்ததனை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்துள்ளது.
நட்பு ரீதியாக நாமல் ராஜபக்சவை சந்தித்தேன்.
அரசியல் நோக்கங்கள் எதுவும் இந்த சந்திப்பில் கிடையாது.
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நோக்கில் நாமல் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என நிரூபித்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வேன் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw3.html

ஊவா மாகாணத்தில் பிரசாரங்களில் ஈடுபடும் 26000 அரச பணியாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: ஜே.வி.பி முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:32.45 PM GMT ]
ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரங்களுக்காக 26000 அரசாங்க பணியாளர்கள் பயன்படுத்தப்படுவதை தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று முறைப்பாடு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திவிநெகும திட்டத்தின் 26000 பணியாளர்களும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களையும் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதனை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் இயலாமையை காட்டி வருகிறார்.
இந்தநிலையில் குறித்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று ஜே.வி.பி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணசபை தேர்தல் களத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, ஜே.வி.பியின் வேட்பாளர் சுதத் பலகல்ல தெரிவித்தார்.
மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாட்டை செய்த பின்னர்  இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw4.html

Geen opmerkingen:

Een reactie posten