தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

பிரான்ஸ் பிள்ளையார் தேர்ப் பவனியில் அனைத்துலக விசாரணைக்கான விழிப்பூட்டல் பரப்புரை

குறுஞ் செய்தி மூலம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது!
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:02.12 PM GMT ]
கையடக்க தொலைபேசி மூலம் குறுஞ் செய்திகளை அனுப்பி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபர் ரிதிபெதி எல்ல தேவாலயத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களுக்கு குறுஞ் செய்திகளை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் மினுவன்கெடே வெல்கால வதுரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv2.html

தொழிற்சங்கவாதி பாலா தம்போ காலமானார்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:03.06 PM GMT ]
இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதியும் லங்கா சமசமாஜ கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான பாலா தம்போ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
குற்றவியல் வழக்கு தொடர்பான சட்டத்தரணியான அவர் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார்.
1922 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தின் முக்கிய குடும்பத்தில் பாலா தம்பு பிறந்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற அவர் 1943 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்திலும் பின்னர் 1944 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றார்.
92 வயதான பாலா தம்போ இலங்கை பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கத்தில் பி.எஸ்.பி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை விவசாய திணைக்களத்தில் பணியாற்றிய அவர் 1947 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து விலக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தில் இணைந்து கொண்டார்.
இலங்கையில் ஏனைய தொழிற்சங்கவாதிகளை காட்டிலும் மிகவும் திடசங்கற்ப தொழிற்சங்கவாதியாக பாலா தம்பு செயற்பட்டார்.
1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சிஎம்யூ தொழிற்சங்கத்தில் 1948ஆம் ஆண்டு பாலா தம்பு பொதுச்செயலாளாராக நியமிக்கப்பட்டார்.
1963 ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தொழிற்சங்க போராளியாக பாலா தம்பு திகழ்ந்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் அவரின் தலைமையில் 1963ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் கொழும்பு துறைமுகத்தில் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு விஸ்தரிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் தொடர்ந்தும் மூன்று மாதங்களாக நீடித்த தபால்துறை பணிப்புறக்கணிப்பிலும் பாலா தம்பு முக்கிய பங்கை வகித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv3.html

பிரான்ஸ் பிள்ளையார் தேர்ப் பவனியில் அனைத்துலக விசாரணைக்கான விழிப்பூட்டல் பரப்புரை
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:11.49 PM GMT ]
ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில் விழிப்புணர்வுச் செயற்பாடுகள், புலம்பெயர் நாடுகளெங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனொரு அங்கமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்திருந்த பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர்த் திருவிழாவில், இது தொடர்பிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன.
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம் எனும் தலைப்பில், பொதுமக்களுக்கு விழிப்பினையூட்டும் வகையில், கேள்வி, பதில் வடிவில் இத்துண்டுப் பிரசுரம் அமைந்திருந்தது.
இவ்விழிப்பூட்டல் ஊடாக தமிழினப் படுகொலை தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை திரட்டுவதனை செயல்முனைப்பாக கொண்டுள்ள இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான மையத்துக்கு வலுவூட்டும் வகையில், இச்செயற்பாடு அமைந்திருந்ததோடு, இவ்வகையான விழிப்பூட்டல் பரப்புரைகள், புலம்பெயர் நாடுகள் எங்கும் இம்மையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv4.html

Geen opmerkingen:

Een reactie posten