தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

வவுனியாவில் கிணற்றில் நீர் இறைக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்: வீதிக்கு இறங்கிய மக்கள்

வன்முறையில் ஈடுபடுவோரை மக்கள் நிராகரிக்க வேண்டும்: அமைச்சர் நிமால் சிறிபால
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 11:23.38 AM GMT ]
வன்முறைகளில் ஈடுபடாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தின் பதுளையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வன்முறைகளில் ஈடுபடாத உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
டிப்பெண்டர் வாகன கலாசாரத்தில் இருந்து மீண்டு மக்களுடன் இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷவின் புதல்வருமான சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் தேனுக்க வித்தானகமகே போன்றவர்கள் டிப்பெண்டர் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வன்முறையான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv0.html
வவுனியாவில் கிணற்றில் நீர் இறைக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்: வீதிக்கு இறங்கிய மக்கள்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 11:38.09 AM GMT ]
வடக்கில் வறட்சி நிலவி வரும் இக் காலகட்டத்தில் வவுனியாவில் உள்ள பொதுக் கிணறு ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது வீட்டுக்கு நீர் இறைத்து வருவதால் மக்கள் போடாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் பொதுக் கிணற்றில் இருந்து நீரைப்பொற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு பொலிஸார் தீர்வை தரவில்லை என தெரிவித்தே மக்கள் ஏ9 வீதியில் அமர்ந்து இப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
வறட்சியான காலத்தில் வவுனியா தேக்கவத்தையில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது வீட்டிற்கு நீர் இறைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையில் பொது மக்கள் நீரை பெறுவதில் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதேவேளை அண்மையில் மக்களின் நலன் கருதி முன்னாள் நகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகரவின் வேண்டுகோளுக்கிணங்க நகரசபையினால் இந்தக் கிணறு ஆழப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் நீரை பெறுவதனால் அப்பகுதியில் மக்கள் நீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கிராம சேவையாளர் மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இது வரை பொது மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாமையினால் இவ் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து வவுனியா பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து சமரசம் செய்ய முயற்சித்த போது பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடாமையினால் அப்பகுதி பௌத்த ஆலயத்தின் பிரதான மதகுரு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஏ9 வீதியில் சில மணி நேரம் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv1.html

Geen opmerkingen:

Een reactie posten