[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 01:43.33 AM GMT ]
சட்டத்தரணி மைத்திரிகுணரட்னவை “நாய்” என நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஞானசார தேரர் திட்டியமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போதே, ஞானசார தேரர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென கோரியுள்ளது.
கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி கலகொடத்தே ஞானசார தேரர், சட்டத்தரணியை திட்டியிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் பொலிஸார் இதுவரையில் விசாரணை நடத்தவில்லை என, மைத்திரி குணரட்னவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பௌத்த பிக்கு ஒருவருக்கு எவ்வாறு இந்தளவு அதிகாரம் கிடைக்கப் பெற்றது என சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாக்கு மூலமொன்றை பதிவு செய்துகொள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கலகொடத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர் இதுவரையில் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என கொம்பனித்தெரு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காரணங்களை கருத்திற் கொண்ட நீதவான், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஞானசார தேரர் வாக்குமூலமொன்றை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUlx1.html
மக்களின் வாழும் உரிமையை ஜனாதிபதியே உறுதி செய்தார்!– பசில் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 02:01.06 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில், நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியும், சூழவுள்ள கடற்பரப்பின் மூன்றில் இரண்டு பகுதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாரை வார்க்கப்பட்டிருந்தது.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் இந்த தேசத்தை அரசாங்கம் ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்தது.
நாட்டின் அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய பின்னணியை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தியது.
நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாக மாறியுள்ளது.
வெளிநாட்டு சக்திகளிடமிருந்தும், உள்நாட்டு சதிகாரர்களிடமிருந்தும் நாட்டை காக்க வேண்டியது அவசியமானது.
ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வரும் உலக நாடுகளில் இலங்கையின் சுதந்திரக் கட்சி முக்கிய இடத்தை வகித்து வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUlx3.html
ஆசிய இளைஞர் விளையாட்டு நிகழ்வை இழந்த ஹம்பாந்தோட்டை
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 02:30.38 AM GMT ]
ஏற்கனவே கொழும்புக்கு அப்பால் உள்ள ஹம்பாந்தோட்டையில் இந்த விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கான பரிந்துரையை ஆசிய இளைஞர் விளையாட்டுக்குழு, ஆசிய ஒலிம்பிக் சபைக்கு தெரிவித்திருந்தபோதும் அதனை அந்தக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கையின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆசிய விளையாட்டுக் குழுவினரும் ஆசிய ஒலிம்பிக் சபையினரும் சந்தித்து ஹம்பாந்தோட்டை தொடர்பில் விவாதித்திருந்தனர்.
இதன்போதே ஹம்பாந்தோட்டையில் இருந்து இந்த விளையாட்டு நிகழ்வை மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலில் அதனை இந்தோனேசியாவில் நடத்த திட்டமிட்டபோதும் பின்னர் டோகா கட்டாருக்கு அது மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விளையாட்டு நிகழ்வை நடத்த ஹம்பாந்தோட்டை விளையாட்டு மைதானத்தின் நிலவரம் உகந்ததல்ல என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUlx4.html
பாகிஸ்தான் அகதிகளை வெளியேற்றுமாறு ஹெல உறுமய கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 02:53.37 AM GMT ]
இலங்கையில் இருந்து பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அகதிகளில் அதிகமானோர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கின்றனர். இவர்களால் மதப் பிரச்சினைகள் எழக்கூடிய வாய்ப்புள்ளதாக ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இவர்களைத் திருப்திப் படுத்துவதற்கும், சந்தோசப்படுத்துவதற்கும் இலங்கையின் அமைதியை இழக்க வேண்டியேற்படலாம்.
ஆகவே பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி அனிலா இம்ரான் என்ற பாகிஸ்தான் பெண் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பை நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தத் தடையில்லை என அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUlx7.html
Geen opmerkingen:
Een reactie posten