[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 03:51.44 AM GMT ]
பிரதி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவே இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்கியிருந்தார்.
“நாட்டை காக்கும் நீலப்படையணி” என்னும் தொனிப் பொருளில் ஆளும் கட்சி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றது.
அதன் ஓர் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பெந்தர அல்பிட்டி பிரதேசத்தில் சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திசாநாயக்க தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கு பதிலளிக்காது உரையாற்ற வேண்டாம் எனவும் கட்சியின் நீண்ட கால ஆதாரவாளர் மேடையின் முன்னாள் குழப்பம் விளைவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் இடையூறை பொருட்படுத்தாது உரையை முன்னெடுக்க முயற்சித்த போதிலும், அதற்கு கட்சி ஆதரவாளர் இடமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தின் பின்னர் சந்தித்து பிரச்சினைகள் பற்றி பேசுவோம் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கு, “ஐயா பய்லா பாடாதீர்கள், எங்களுக்கு சமுர்த்தி கிடையாது, மண்ணெண்ணை முத்திரை கிடையாது, பஸ் தரிப்பிடத்தில் வாழ்க்கையை கழிக்கின்றோம்” என ஆதரவாளர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் நீண்ட காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், இன்றும் நாம் வீதியில் தான் வாழ்ந்து வருகின்றோம், எந்த நாளும் நீங்கள் சொல்வதனையே கேட்டுக்கொண்டோம். இப்போது நாங்கள் சொல்வதனை கேட்டுக்கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இடையூறு ஏற்படுத்திய நபருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் குறித்த நபர், மனைவி, பிள்ளைகள்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர் பெந்தர தேர்தல் தொகுதியை சேர்ந்தவர் அல்ல எனவும் குடிபோதையில் உளறியதாகவும் சில சதிகாரர்களின் கைம்பொம்மையாக இவர் செயற்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkoy.html
மனித உரிமை விவகாரங்களில் இருந்து அமைச்சர் மகிந்த சமரசிங்க விலகல்!
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 04:34.09 AM GMT ]
மனித உரிமை விவகாரங்களுக்கு ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக செயற்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க இப்போது தனக்கும் இந்த விவகாரங்களுக்கும் எந்தவித பொறுப்பும் இல்லையெனவும் இது சம்பந்தமான சகல விடயங்களும் இன்மேல் வெளிவிவகார அமைச்சரிடமே தெரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தவலை அவர் வெளியிட்டார்.
இனிமேல் நான் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியில்லையென்றும் மனித உரிமை சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் இனி வெளிவிவகார அமைச்சிடமே தெரிந்து கொள்ளுமாறும் சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற மளித உரிமை பேரவை கூட்டத்தொடர்களில் இலங்கையின் விசேட பிரதிநிதியாக அமைச்சர் மகிந்த சமரசிங்க கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkoz.html
2009ம் ஆண்டு வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதலை ஒத்துக் கொண்டது அரசு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 04:36.51 AM GMT ]
அவர் தொடர்ந்து கூறுகையில்
2009ம் ஆண்டு 6 தடவைகள் மாத்திரமே ஷெல் வீச்சுகள் வைத்தியசாலை மீது தவறுதலாக தாக்கியதாகவும், இது திட்டமிட்ட செயல் இல்லையெனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் சர்வதேச விசாரணைகள் தேவையில்லை உள்ளக விசாரணைகளே போதும், எனினும் இராணுவ விசாரணை தவறானது என்றும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko0.html
Geen opmerkingen:
Een reactie posten