தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

படகுகளை கைப்பற்றுமாறு இலங்கைக்கு நானே அறிவுறுத்தினேன்: சுப்பிரமணியன் சுவாமி - சுவாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல!- தமிழிசை!



கிளிநொச்சி சாந்தபுரத்தில் வறுமைப்பட்ட குடும்பத்தின் மரண வீட்டுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் நிதியுதவி
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 10:09.03 AM GMT ]
கிளிநொச்சி சாந்தபுரத்தில் வசித்துவந்த ரெங்கசாமி பீற்றர் என்ற வயோதிபர் வறுமையினால் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்திருந்தார்.
மரணவீட்டை நடத்துவதற்கு, வறுமைக்கு உட்பட்டிருந்த அவரது குடும்ப பெண்பிள்ளைகள்  மிகவும் வசதியற்று ஏங்கிய நிலையில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் பணிப்பின் பேரில் பா.உறுப்பினரின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உப தலைவருமான பொன்.காந்தன் நேரடியாக இன்றைய தினம் சென்று, மரணவீட்டுக்கான நிதியுதவியை வழங்கி வைத்தார்.
அத்துடன் நீர்வழங்கல் போன்ற உதவிகளை செய்துள்ளதுடன் சாந்தபுரம் கிராம அபிவிருத்திச்சங்கம் விளையாட்டுக்கழகம் முதியோர் சங்கம், கட்சியின் சாந்தபுரம் பிரதிநிதி சீலன் பிரதேசசபை உபதவிசாளர் நகுலன், உறுப்பினர் சுகந்தன் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா மற்றும் கருணையுள்ளங்களின் ஒத்தாசையுடன் மரணவீடு நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlvy.html
படகுகளை கைப்பற்றுமாறு இலங்கைக்கு நானே அறிவுறுத்தினேன்: சுப்பிரமணியன் சுவாமி - சுவாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல!- தமிழிசை
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 10:46.46 AM GMT ]
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது வழமையாகிவிட்டது. இதனை தடுக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. தங்களது படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி, இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,
நான் கடைசியாக இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள் என்பவர்கள் தொழிலாளர்கள். அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்து விடுங்கள். ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள், பணக்காரர்கள்.
தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பாண தமிழர்களும் கூறுகின்றனர்.
எனவே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டு விடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுப்பிரமணிய சாமியின் கருத்து பாஜக கருத்து அல்ல: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
பாஜக தான் அதிமுக மீனவர்களை பற்றி கவலைக்கொண்டுள்ளது. மீனவர்களின் துன்பத்தை தீர்ப்பதற்கு என்னென்ன  நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சுப்பிரமணிய சாமி சொன்னது பாஜக கருத்துக்கள் அல்ல என்று மிகத்தெளிவாக தெளிப்படுத்த விரும்புகிறேன்.
அவர் கருத்துக்களை வைத்து ஏதோ பாஜக கருத்துப்போல தமிழகத்தில் செய்திகள் உலா வருவதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
எங்களுடைய கருத்துக்கள் இல்லை என்பதை தமிழக மக்களுக்கு தெளிவாக சொல்லிக்கொள்கிறோம் என்றார்.
தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த  போது,
நான் கடைசியாக இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள் தொழிலாளர்கள். அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்துவிடுங்கள்.
ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள் பணக்காரர்கள். தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பாண தமிழர்களும் கூறுகின்றனர்.
எனவே, எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டுவிடுங்கள். ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlvz.html

Geen opmerkingen:

Een reactie posten