தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

யாழ் பல்கலையின் துணைவேந்தரின் “ஆமி” உறவு அம்பலம்

புலிகளின் தலைவர் நினைத்ததை கண்டு பிடித்த EPDP கைக் கூலி….

மகிந்தர் ஆட்சிக்கு வந்தால் போர் ஆரம்பமாகும் அவர் ஒரு கடும் சிங்களபோக்காளர் என்று புலிகள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். இருப்பினும் மகிந்தர் ஆட்சியேற அவர்கள் தடையாக இருக்கவில்லை. இதன் காரணமாகவே புலிகள் அழிந்தார்கள் என்று ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு ஒரு விடையம் புரியவில்லை. போர் என்றாலும் சரி, சமாதானம் என்றாலும் சரி புலிகள், எதற்கும் அஞ்சியது இல்லை. அவர்கள் நினைத்திருந்தால் இணக்க அரசியலை நடத்தியும் இருக்கலாம் ஈபிடிபோ போல. அவர்கள் தமது பாதையில் மற்றும் நோக்கத்தில் உறுதியோடு இருந்தார்கள். அவர்கள் ஒரு கொள்கைக்காக வாழ்ந்தார்கள். இவை எங்கே ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவிற்கு தெரியப்போகிறது.
http://www.jvpnews.com/srilanka/80826.html

பிள்ளையானின் சகாக்கள் பணமோசடியில்

மாகாண சபை உறுப்பிரின் மாதிரிப் போலிக் கையேட்டினைப் பயன்படுத்தி 7 இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு (20 இலட்சம்) அமைச்சர் குமாரவெல்கம அவர்களின் மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு போலி நியமனக் கடிதம் வழங்கி மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நியமனம் பெற்றவர்கள் மட்டக்களப்பிலுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்றபோது தாம் ஏமாற்றப்பட்ட விடயம்;தெரியவந்ததையடுத்து மாகாணசபை உறுப்பினர் சந்திரகாந்தனின்கவனத்திற்கு அவர்கள் கொண்டுவந்தனர்.
இவர்களிடம் வேலைபெற்றுத் தருவதாக மட்டக்களப்பை  சேர்ந்த தம்பிராசா பாலசிங்கம் (சிறி)மற்றும் மட்டக்களப்பு நாவற்குடாவில்   வசிக்கும் ஆசிரியரான குமார் குமரேஷன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதுடன் ஏறாவூரைச் சேர்ந்த கரீம்   என்பவர் இவ் மோசடிச் சம்பவத்தின் முக்கிய நபராவார்.
ஆயுள்வேத வைத்தியசாலை இரயில்வே ரெலிகொம் ஆகிய இ.டங்களில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஒவ்வொரு நபர்களிடமிருந்து சுமார் 2 இலட்சம் தொடக்கம் 4 இலட்சம் வரையிலான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு  மாவட்ட மக்கள் இச்சம்பவம் பற்றி மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு மாகாண சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவரது பெயரைக் களங்கப் படுத்தும் இவ்வாறான சும்பவங்கள் பற்றி அறிந்தால் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். .
http://www.jvpnews.com/srilanka/80829.html

யாழ் பல்கலையின் துணைவேந்தரின் “ஆமி” உறவு அம்பலம்

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டுள்ளமை தழிம் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பல்கலை மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் அச்சுறுத்தும் பாணியில் படையினர் செயற்பட்டுவருவது தெரிந்ததே.
ஆயினும் இதன் போதெல்லாம் படைத்தரப்பின் நடவடிக்கைக்கு பல்கலை. துணைவேந்தர் ஆதரவாக இருந்துவந்துள்ளார். அவரே மாணவர்கள் மீதான வன்முறைக்கு துணைபோகிறார் என பல்கலை. மாணவர் சமூகம் குற்றஞ்சாட்டியிருந்தது. இதேவேளை அண்மையில் பல்கலையில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வெசாக் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதன் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. பல்கலையில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்ற பின்னிற்கும் துணைவேந்தர் படையினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றியமை கல்விச் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளையும் கலந்துகொண்டார்.jaffna-vc-armyjaffna-vc-army-01
http://www.jvpnews.com/srilanka/80832.html

Geen opmerkingen:

Een reactie posten