முழுக்க முழுக்க விடுதலைப் புலிகள் ஆதரவு தீர்மானங்களை நிறைவேற்றும் அவருக்கு விடுதலைப் புலிகளால் எப்படி ஆபத்து வரும்? இவ்வாறு தமிழக சஞ்சிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில், கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
கேள்வியும் - பதிலும்
கேள்வி- விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து. அதனால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்’ என்று சொல்கிறாரே ஜெயலலிதா?
பதில் - தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும், 'ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும்’ என்றும் 'ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் தீர்மானம் போட்ட ஜெயலலிதாதான், இப்போது விடுதலைப் புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் என்று சொல்கிறார். முழுக்க முழுக்க விடுதலைப் புலிகள் ஆதரவு தீர்மானங்களை நிறைவேற்றும் அவருக்கு விடுதலைப்புலிகளால் எப்படி ஆபத்து வரும்?
தீர்ப்பைத் தள்ளிப் போடுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். அதற்கு இதுதான் கிடைத்திருக்கும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
இதில் யோசிக்க வேண்டியது என்னவென்றால், இப்படி ஒரு வார்த்தையை கருணாநிதி சொல்லியிருந்தால் புலி ஆதரவாளர்கள் என்ன குதி குதிப்பார்கள். ஜெயலலிதா என்றதும் கப்சிப்!
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv1.html
Geen opmerkingen:
Een reactie posten