[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 02:38.05 AM GMT ]
1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காப்பு படையினருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த திலீபன் 12 நாட்களின் பின்னர் உயிர்நீத்தார்.
திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க பொலிஸாரின் அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கு பொலிஸ் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் பொலிஸ் அனுமதி மறுப்பையும் பொருட்படுத்தாது நினைவு தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் எட்டுப் பேரும் நேற்று மாலையில் விடுதலைப் செய்யப்பட்டுள்ளனர்.
போலி வீசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த சிரிய பிரஜை கைது
போலி வீசா ஒன்றைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த சிரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய போது, போலியான வீசா பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த சிரிய பிரஜை ஜெர்மனிக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரகைளை நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் நிலவி வரும் அரசியல் பதற்ற நிலைமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிரிய பிரஜைகள் வேறும் நாடுகளில் புகலிடம் பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச அச்சகத்தின் ஊழியர்களை தாக்கிய அரசாங்கத்தின் குண்டர்கள்
அரசாங்கத்தின் குண்டர்கள் சிலர் தாக்கியதன் காரணமாக அரசாங்க அச்சகத்தின் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரத்லால் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க அச்சகத்தில் ஆளும் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், நேற்று அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதன் பின்னர், தாக்குதல் சம்பவம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், ஆளும் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வெளியில் இருந்து வந்த குண்டார்கள் இணைந்து அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv2.html
ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைப்பு குறித்து மீண்டும் இலங்கை சிந்திக்கவேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 03:11.03 AM GMT ]
அத்துடன் சர்வதேச விசாரணையாளர்கள் மேற்கொள்ளும் விசாரணைகளின் போது சாட்சியமளிப்பவர்களை தடுக்கும் மற்றும் மனித உரிமை காப்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது
இவ்வாறானவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் மீது தொந்தரவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறானவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் மீது தொந்தரவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கும் அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது.
அதேநேரம் மததலங்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை கண்காணிப்பகம் கண்டித்துள்ளது.
இந்தநிலையிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருகிறது.
எனவே இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv3.html
Geen opmerkingen:
Een reactie posten