தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

மொரிசனும் சட்டமும்! அகதிகளின் அவலநிலைக்கு என்றுதான் தீர்வு வருமோ!- நவ்ரு புகலிடக் கொரிக்கையாளர்கள் முகாமில் கலவரம்!

ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசாங்கம் விளையாடக் கூடாது: ரவி கருணாநாயக்க
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 02:22.35 AM GMT ]
ஊழியர் சேமலாப நிதியத்தில் அரசாங்கம் விளையாடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியப் பணம் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம்.
தனியார் துறையில் கடமையாற்றி வரும் சிலர் 55 வயதில் ஓய்வு பெற்றுக்கொள்ள அஞ்சுகின்றனர்.
ஏனெனில் தங்களது ஊழியர் சேமலாநிதிப் பணம் கிடைக்காது என்ற அச்சமே இதற்கான காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர் சேம லாப நிதியப் பணத்தை அரசாங்கம் மோசடி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களின் பணத்தை முதலீடு செய்யும் போது மிகவும் நிதானத்துடன் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv0.html
மொரிசனும் சட்டமும்! அகதிகளின் அவலநிலைக்கு என்றுதான் தீர்வு வருமோ!- நவ்ரு புகலிடக் கொரிக்கையாளர்கள் முகாமில் கலவரம்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 01:02.02 AM GMT ]
மொரிசன் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கம்போடியாவுடனான ஒப்பந்தத்தை நேற்று கைசாத்திட்டுள்ளார். இது தொடர்பான முழுமையான தகவலை சற்று அழமாகப் பார்ப்போமானால்,
இந்த அகதிகள் தொடர்பான பிரச்சினை அவுஸ்திரேலியா அரசாங்கத்தை விட அமைச்சர் மொரிசன் தனது வீட்டு பிரச்சினை போல்தான் எடுத்துக்கொண்டுள்ளார் என்பது மிகவும் தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.
வழமையான சர்வதேச நாடுகளில் நீதித்துறைக்கு மதிப்பளிப்பது வழமை அதிலும் அவுஸ்திரேலியா போன்ற மனிதநேய நாடு தற்போது அதற்க்கு எதிர்மாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
உதாரணமாக சொல்லப் போனால் உயர் நீதிமன்றம், சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர், அகதி ஆர்வலர்கள் என பலதரப்பினாலும் மொரிசனுக்கு பல தடவை சொல்லியும் செவிடனுடைய காதில் சங்கு ஊதுவது போல் எதற்கும் அடிபணிய மாட்டேன் என்ற கொள்கையை கைவிடவில்லை.
அவுஸ்திரேலியா இனிமேல் அகதிகளை உள் வாங்குவதில்லை என்ற என்ற நிலைபாட்டில் அரசாங்கத்தை விட மொரிசன் ஒத்தக்காலில் நிற்கின்றார் என்பதே தெளிவாக உள்ளது.
அதிலும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு நடுக்கடலில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து இலங்கை அகதிகள் என்றால் வந்த வழியாகவே இலங்கைக்கு திருப்பியனுப்புவது மற்றைய நாட்டவரை கம்போடியா அனுப்புவதே அவருடைய குறிக்கோள்.
மொரிசனைப் பற்றி சொல்லப்போனால் சொல்லிக் கொண்டே இருக்கலாம், தற்போது மொரிசன் அறிமுகப்படுத்திய தற்காலிக வீசா பற்றி பார்ப்போமானால்,
தற்காலிக வீசா என்றால் என்ன? அதனுடைய நன்மை என்ன?
தீமை என்ன என்பதை சற்று பார்ப்போமானால், இந்த தற்காலிக வீசாவனது யோன் கவர்ட் பிரதமராக இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீசா லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த வீசாவின நடைமுறைப்படுத்துவதற்க்கு இரண்டு தடவை லிபரல் கட்சி முயன்ற போதும் சென்ட் சபையில் தோல்வியை தழுவியது. தற்போது டோனி அபொட் தலைமையிலான அரசங்கத்தின் துணைக்கட்சியான பாமர் கட்சி இதற்கு ஆதராவாக சென்ட் சபையில் வாக்களிக்கவுள்ளது.
இந்த புதிய வீசா அமுலுக்கு வந்தால்? அதாவது இந்த S-H-E-V எனப்படும் புதிய வீசா { பாதுகாப்பு புகலிட ஆக்க வீசா} புகலிடம் கோரி படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த ஒருவர் இந்த வீசா வழங்கப்பட்டிருந்தால் அவர் ஒரு தற்காலிக வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதாவது இந்த நடைமுறைப்படுத்தவிருக்கும் வீசா ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு தொழில் செய்யும் அனுமதியும் மருத்துவ அட்டையும் வழங்கப்படும். இதிலும் சில கட்டுப்பாடுகளும் உள்ளன
அவை SHEV வீசா வழக்கப்பட்டவர் கல்வி அமைப்புகளுடன் சேர்ந்து கல்வி கற்க வேண்டும் அல்லது தொழில் பார்க்க வேண்டும், அவர் எங்கே வசிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வசிக்க வேண்டும். அந்த இடமானது தொலைதூரம் அல்லது பிராந்திய நகரமாக இருக்கக் கூடும்.
இந்த வீசாவானது 5 வருடத்துக்கே செல்லுபடியாகும், இந்த காலவரை முடிந்தவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு மற்றைய வீசாவுக்கோ அல்லது குடுமபத்தை இணைப்பதற்க்கான வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒரு நிரந்தர வீசா விண்ணப்பத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதே இதன் கருத்தாக உள்ளது. இதன் மூலமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா குடிமக்களாக ஆகமுடியாது, இந்த நடவடிக்கை தரகர்களுக்கு ஒரு பாடமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
எப்படி பார்த்தாலும் குடும்பங்களை எடுக்கும் போது சில புகலிடக் கோரிக்கையாளர்கள் மரணித்து விடுவார்கள் மற்றையவர்கள் மொரிசனின் வயதுக்கு வந்து விடுவார்கள். இதன் பிறகு வரும் அரசங்கம் என்ன சொல்லப் போகின்றது என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு நம்பிக்கையுள்ளது அகதிகளை உள்வாங்கப்பட மாட்டாது என்று சொன்ன அமைச்சர் மொரிசன் 5 வருடங்களுக்கு பின் குடும்பங்களை இணைக்கலாம் நிரந்தர வீசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதில் என்ன அரசியல் இருக்கின்றதென்பது தெரியவில்லை.
மற்றைய தற்காலிக வீசா அதாவது [TVP }என அழைக்கப்படும் வீசா வழங்கப்படுபவர்களுக்கு தொழில் செய்யும் அனுமதியும் மருத்துவ அட்டையும் வழங்கப்படும்.
இந்த வீசா 3 வருடங்களுக்கே செல்லுபடியாகும், இவர்கள் குடும்பங்களை இணைக்க முடியாது. இந்த 3 வருடங்கள் முடிந்தவுடன் என்ன நடக்கும் என்பதை இதுவரைக்கு அறிவிக்கப்படவில்லை.
எது எவ்வறாயினும் மொரிசனின் இந்த இரண்டு விசாக்களும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உகந்தது அல்ல என்று அகதிகளுக்காக வாதாடும் சட்ட வல்லுனர் டேவிட் மேன் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் லேபர் கட்சி விட்டுச் சென்ற 30,000 அகதிகளின் விண்ணப்பங்கள் மிக விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்றும், குடும்பங்கள் சிறுவர்கள் உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்கள் என பிரித்தெடுத்து பரிசீலனை செய்யப்படும் என்றும். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் {R.R.T] எனப்படும் மீள்பரிசீலனை முற்றாக நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மாற்றத்தில் உள்ள பல முக்கிய விடயங்கள் உள்ளன. அவை பின்வருமாறு
1. நவ்ரு மனுஸ், பப்புவா நியூகினியாவில் உள்ளவர்கள் இந்த 2 வீசாவுக்கும் விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள்,
2. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சாசனம் குறித்த சட்ட பிரிவுகள் அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டத்தில் இருந்து அகற்றப்படும்,
3. அவற்றுக்கு பதிலாக ஐநா மாநாட்டுக்கு அவுஸ்திரேலியாவின் சட்டம் என்ன என்பது விளக்கப்படும்,
4. ஒருவருடைய பாதுகாப்பு தொடர்பான சந்தேகம் இருக்குமானால் அதற்கு மாற்றுவழிகள் [சொந்த நாட்டுக்கு போனால் ஆபத்து வருமா என்பது போன்றது),
5. கடல் மார்க்கமாக வந்தவர்களுக்கு, அதிகாரமற்ற கடல் மார்க்கமாக வந்தவர் என முத்திரை இடப்படும் இவர்களுக்கு குழந்தைகள் பிறந்தாலும் இந்த குழந்தைகளுக்கும் அதிகாரமற்ற கடல் மார்க்கமாக வந்தவர்கள் என முத்திரை இடப்படும்.
ஒட்டுமொத்தத்தில் அகதி கோரிக்கையாளர்கள் என்பதை விட அடிமை கோரிக்கையாளர்கள் என்பதே மிக சிறந்த ஒன்றாக இவற்றில் இருந்து புலப்படுகின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் மொரிசன் என்ன செய்தாலும் பரவாயில்லை, தமக்கு எதோ ஒரு வீசா தந்தால் போதும் என்ற மனப்பாங்கில் ஒருசிலரும் என்ன நடக்கப் போகின்றது என்பது தெரியாமல் ஒரு சிலரும் நாளுக்கு நாள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வண்ணமேயுள்ளனர்.
ஒரு காலத்தில் ஹிட்லர் நடத்தியது போன்று அவுஸ்திரேலியா மாறி விடுமோ என்ற அச்சத்தில் அவுஸ்திரேலியா வெள்ளை இனத்தவர்களும், படகு மக்கள் {boat people } என்ற ஒரு புதிய பெயரை உருவாக்கியுள்ள ஒரு சில எமது தமிழ் உறவுகளுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் அகதிகளின் நிலைக்கு என்றுதான் தீர்வு வருமோ! {எஸ் கே}
நவ்ரு புகலிடக் கோரிக்கையாளர்கள்  முகாமில் கலவரம்
நேற்றைய மொரிசனின் அறிவிப்பை அடுத்து நவ்ரு முகாமில் அடைத்து வைத்திருக்கும் சுமார் 500 குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் தம்மை தாமே துன்புருதியுள்ளதாக இயன் தெரிவித்தார் ஒரு 14 வயது சிறுமி தனது வாயை உடைத்ததுடன் 24 வயது புகலிடக் கோரிக்கையாளர் கழுத்தை அருத்துள்ளதகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக 100 க்கும் மேற்ப்பட்ட பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தொடர்ந்து ஆர்ப்படம் நடத்துவதற்கு பொலிசாரின் அனுமதி கேட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் முதல் தற்போது வரைக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் வாசலில் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
எது எவ்வறாயினும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இன்று இரவும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அகதிகள் அதிரடி கூட்டனி அமைப்பாளர் இயன் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVivz.html

Geen opmerkingen:

Een reactie posten