மியன்மாரின் பிரபல பௌத்த பிக்கு விராது தேரர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு நாளை நடத்தும் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நோக்கில் அவரது இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
இவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏனைய நாடுகளின் இரண்டாம் நிலை அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரும்போது அளிக்கப்படும் வரவேற்பு விராது தேரருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது பல சேனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் விராது தேரருக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் மூலம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மியன்மாரில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் விராது தேரரின் 969 அமைப்பினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்த சிந்தனைகளின் பேரில் கொடூரமான முறையில் உயிருடன் எரித்தும், அடித்தும் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனாவின் மாநாட்டில் விராது தேரர் கலந்து கொள்வது தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக வத்திகான் சதித்திட்டம் - பொதுபல சேனா
வத்திகான், இலங்கையில் சிங்கள பௌத்த சக்திகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை பயன்படுத்தி சூட்சுமான சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுபல சேனா நாளைய தினம் நடத்த உள்ள மாநாட்டில் நாட்டின் பிரதம் பதவிக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பரிந்துரைக்க தயாராகி வருவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் நடத்தும் மாநாடு பௌத்த அரசுக்கான தேசிய வேலைத்திட்டம் மாத்திரமே எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தமது அமைப்பின் தேசிய மாநாட்டில் நாட்டின் மீது அக்கறை ஒன்றை தேசிய தலைவரை அறிமுகப்படுத்த போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv7.html
Geen opmerkingen:
Een reactie posten