மேர்வின் கதையை இடையில் தடுத்த மகிந்த
ஊவா மாகாண சபைத்தேர்தலுக்காக மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அமைச்சர் மேர்வின் சில்வாவும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் தமது உரையில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.வி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து அவரை தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசினார்.
இதனை அவதானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரின் பேச்சை இடைநிறுத்தியதுடன் எவரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கிப்பேசக்கூடாது என்று பணித்தார். ஜனாதிபதியின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மேர்வின் தனது உரையை தொடர்ந்தார்.
http://www.jvpnews.com/srilanka/80867.html
இந்தியாவில் இலங்கைத் தமிழர் கொலையில் மர்மம்…
கருமண்டபம் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 56 வயதான செல்வேந்திரன் என்ற இவர், விஸா முகவராக இருந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/80870.html
முகமாலை கண்ணிவெடிகள் மத்தியில் பிரித்தானியத் தூதுவர்!
இதன்போது, 2010 முதல் 2014ஆம் ஆண்டுகளுக்காக மாத்திரம் தமது நாடு நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைளுக்காக 3.5 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கியுள்ளதாக ஜோன் ரங்கீன் சுட்டிக்காட்டினார். மேலும் கண்ணிவெடிகளை அகற்ற அடுத்த 18 மாதங்களுக்காக 1.6 மில்லியன் பவுண்ஸ்களை பிரித்தானியா வழங்கவுள்ளதாகவும் ரங்கீன் தெரிவித்தார்.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமே பிரித்தானிய ஆதரவுடன் நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/80873.html
Geen opmerkingen:
Een reactie posten