தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

தேர்தல் விதிமுறைகளை மீறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கபே (செய்தித்துளிகள்)

மோடி – மஹிந்த நியூயோர்க்கில் சந்திக்க வாய்ப்பு!
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:37.47 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வு நடைபெறும் போது இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 69வது பொது அமர்வு செப்டம்பர் 16ம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.  பொது விவாதம் செப்டம்பர் 24ம் திகதி இடம்பெறும்.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செப்டம்பர் 25ம் திகதியன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.
இந்தநிலையில் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவும் பொது அமர்வுக்கு புறம்பாக சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அண்மையில் புதுடில்லியில் தாம் கலந்தாலோசித்த விடயங்களை மோடி, மஹிந்தவுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlr7.html
மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார்: ஆனந்த அலுத்கமகே
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 01:39.29 AM GMT ]
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார் என அவரது சகோதரரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி புதிய தொகுதி அமைப்பாளர் பதவியை பொறுப்பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார்.
அமைச்சரின் வெற்றிக்காக இரத்தம் வியர்வை சிந்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அவர் விரட்டிவிட்டார்.
கிரமமாக ஒவ்வொருவராக உதவி செய்தவர்களை அவர் உதறித் தள்ளிவிட்டார். இறுதியில் நிழலைப் போன்று இருந்த மனைவியையும் விரட்டிவிட்டார்.
அதிகார மோகம் மற்றும் தலைக்கணத்தினால் அமைச்சர் அலுத்கமகே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்.
நாவலப்பிட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றியீட்டி வந்தது.
அமைச்சர் அலுத்கமகே தேர்தல் வன்முறைகள் மற்றும் மோசடிகளின் மூலமே ஆளும் கட்சியை வெற்றியடையச் செய்கின்றார்.
இதனை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நான் தெரிவிக்கின்றேன்.
நாவலப்பிட்டி சார்க் கிராமத்தில் உரியவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை.
வர்த்தகர்கள் உள்ளிட்ட அமைச்சருக்கு தெரிந்தவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தரகுப் பணம் இல்லையென்றால் அபிவிருத்தி கிடையாது. தரகுப் பணம் கிடைக்காத சில பாலங்கள் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாடு அமைச்சரின் கைகளிலேயே இருக்கின்றது.
ரயில் திணைக்களக் காணிகளை அமைச்சா் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டார்.
அமைச்சருக்கு தேவையான வகையிலேயே பொலிஸார் செயற்படுகின்றனர் என ஆனந்த அலுத்கமகே கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUls1.html
தேர்தல் விதிமுறைகளை மீறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கபே (செய்தித்துளிகள்)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 01:52.11 AM GMT ]
ஊவா மாகாணசபை தேர்தலில் ஈடுபடும் வேட்பாளர்களின் வாகனங்கள் இலக்க தகடற்ற நிலையில் வீதியில் ஓடித்திரிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு நிலையமான கபே அமைப்பு, இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
இந்த நிலைமை மொனராகலையில் பயங்கர நிலைமை ஒன்றுக்கு இட்டுசெல்லும் என்றும் அந்த நிலையம் எச்சரித்துள்ளது.
இதற்காக ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று இரவு 9 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கபே அமைப்பு, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் உறுப்பினர் ஒருவரின் வாகனம் இலக்கதடறின்றி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பின்னர் புத்தளம் உட்பட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்டமையையும் கபே சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் ஆளும் கட்சியின் வேட்பாளர் செந்தில் தொண்டமானின் வாகனம் ஒன்று பதிவு செய்யப்படாத நிலையில் பண்டாரவளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கபே அமைப்பு முறையிட்டுள்ளது.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 141 முறைப்பாடுகள்
ஊவா மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் மற்றும் விதி மீறல்கள் தொடர்பில் 141 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொனராகல் மாவட்டத்தில் 104 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு அறிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் 30 முறைப்பாடுகளும், ஏனைய சம்பவங்கள் தொடர்பில் ஏழு முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆளும் கட்சியினர் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டு வருதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகள் போதுமானது: ஜே.வி.பி.
அரசாங்கம் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகள் போதுமானது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபை ஆட்சிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இதில் ஒருநாள் ஆட்சியை நிர்ணயிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கின்றது. மக்களின் கைகளிலேயே அந்த நாளில் அதிகாரம் இருக்கின்றது.
அரசாங்கத்தின் கள்ளக்கும்பல் நாட்டுக்கு ஏற்படுத்தி வரும் அழிவுகள் போதுமானது.
தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் விரோத செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
 ஊவா மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு ஓர் பாடம் கற்பிக்க வேண்டும்.
அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தை ஆரம்பிக்க ஊவா மாகாணசபைத் தேர்தல் சிறந்த சந்தர்ப்பம்.
மக்களின் வாக்குரிமையானது மிகவும் வலுவானது. எனினும், இந்த அதிகாரத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.
நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளைகள், ஊழல் மோசடிகளை தடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு நிலைமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைத்து மக்களும் பங்களிப்பு செய்ய வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பசறை - மடுல்சீமை விபத்தில் பிக்கு பலி
பசறை - மடுல்சீமை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று மாலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறையில் இருந்து மடுல்சீமை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை அதன் சாரதியால் கட்டுப்படுத்த முடியாது போனதால், அது வீதியை விட்டு குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பிக்குவும் சாரதியும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், பிக்கு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பந்தமாக பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUls2.html

Geen opmerkingen:

Een reactie posten