தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

தாய்லாந்தின் தடுப்பு முகாம்களில் இலங்கையர்களும் உள்ளனர்: மனித உரிமை கண்காணிப்பகம்

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன் வயோதிபர் தீக்குளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 06:03.16 AM GMT ]
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வயோதிபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
60 வயதுடைய வயோதிபரே இவ்வாறு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko6.html
தாய்லாந்தின் தடுப்பு முகாம்களில் இலங்கையர்களும் உள்ளனர்: மனித உரிமை கண்காணிப்பகம்
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 06:27.09 AM GMT ]
தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அகதிகளில் இலங்கையர்களும் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச மனித உரிமை  கண்காணிப்பகம் தெரிவிக்கும் போது,
தாய்லாந்தின் தடுப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.  இந்த முகாம்களில் சிறுவர் உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்களுடைய நலன்களுக்கு ஆபத்துள்ளது.
குடியேற்றவாசிகளும் அவர்களின் குழந்தைகளும் அவசியமற்ற விதத்தில் வசதிகளற்ற தடுப்பு முகாம்களிலும், பொலிஸ் தடுப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதுகுறித்து சர்வதேச அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தடுத்து வைத்திருக்கப்படும் அகதிகளில் இலங்கையர்களும் உள்ளதாக சர்வதேசக் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko7.html

Geen opmerkingen:

Een reactie posten