தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

நியூயோர்க்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுநலவாய அமர்வு!

சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பில் தரித்துசென்றதாக சீனா அறிவிப்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 07:09.28 AM GMT ]
தமது நாட்டின் நீர்மூழ்கி கப்பல் அடென் குடாவுக்கு செல்லும் வழியிலேயே இலங்கையில் தரித்துச்சென்றதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏடன்குடாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் சென்றுக்கொண்டிருக்கும் போதே இலங்கையில் தமது நீர்மூழ்கி கப்பல் தரித்துசென்றதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் சீனாவின் 039சொங் ரக நீர்மூழ்கிகப்பல் இலங்கை சென்று திரும்பியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன அதேநேரம் மேலும் இரண்டு கப்பல்கள் இந்த வருட இறுதிக்குள் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெங் யாங்செங் ஏடன்குடாவில் நிலைகொண்டிருக்கும் சீன மக்கள் குடியரசு படைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகாகவே நீர்மூழ்கி கப்பல் கொழுப்பில் தரித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நீர்மூழ்கிகப்பல் சீனா ஜனாதிபதி இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வந்தவேளையில் இந்த மாதம் 7 ஆம் திகதியில் இருந்து 14ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் சீனாவினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட சர்வதேச கொள்கலன் இறங்குத்துறையில் தரித்துநின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நியூயோர்க்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுநலவாய அமர்வு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 06:45.54 AM GMT ]
நியூயோர்க்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது 2015ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் வேலைத்திட்டங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் தமது ஒப்புதலை வழங்கினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பொதுநலவாய தலைவர்கள் ஐக்கிய நாடுகளின் நடைமுறைகளை முறையே கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களை காப்பதற்கு 53 நாடுகளின் தலைவர்களும் உறுதிக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பொதுநலவாய நாடுகளின் குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViw3.html

Geen opmerkingen:

Een reactie posten