தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

சரக்கு ரயில் தடம்புரண்டதால் பயணிகள் அசௌகரியம் (மலையக செய்திகள்)!

நானுஓயாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் பயணிகளுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இங்குருஓயா கலபொட புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இந்த ரயில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
26.09.2014 அன்று இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தடம் புரண்ட புகையிரத்தை வழமைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில் அட்டன் புகையிரத நிலையத்திலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச்சென்று இரு புகையிரதத்திற்கும் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் கைகலப்பு நால்வர் கைது
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் 26.09.2014 அன்று இரவு ஒரு குறிப்பிட்ட நபர்களால் வைத்தியசாலையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர்கள் நோயாளி ஒருவரை இரவு 7 மணிக்கு வைத்தியசாலைக்கு பார்க்க சென்ற போது வைத்தியசாலையில் சேவைபுரியும் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
பிறகு அது கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏற்பட்ட கைகலப்பினால் வைத்தியசாலையில் சேவைபுரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் மதுபோதையில் இருந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நான்கு சந்தேக நபர்களையும் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறந்து வைப்பு
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் சமன் ரத்நாயக்க 27.09.2014 அன்று திறந்து வைத்தார்.
குறித்த கட்டிடத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு பிரிவு, முறைபாடு செய்யும் காரியாலயம் உட்பட பொது நூலகம், பொலிஸ் போக்குவரத்து பிரிவு என பல பிரிவுகள் இக்கட்டிடத்தில் காணப்படுகின்றது.
இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

மாமாவை கொலை செய்த மருமகன் கைது
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஞ்ஜூராவ பிரதேசத்தில் ஒரகட வீதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
26.09.2014 அன்று இரவு 7.30 மணியளவில் ரஞ்ஜூராவ பிரதேசத்தில் ஒரகட வீதியில் இருக்கும் இவரின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர் லொக்குஹேவாகே குலதாஸ (வயது 57) நான்கு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில் உயிரிழந்த நபரின் நான்காவது மகளை திருமணம் முடித்த மருமகனே இவ்வாறு கொலை செய்ததாக கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்ததாகவும் அதிலிருந்து தப்பி வந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்ததாகவும் 27.09.2014 அன்று சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/show-RUmsyJRbKViw2.html

Geen opmerkingen:

Een reactie posten