தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

ஜெயக்குமாரி காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்!

சீன பிரஜை வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!(படம் இணைப்பு)
13 கிலோ நிறையுடைய வல்லப்பட்டையை கடத்திச்செல்ல முற்பட்ட சீனப்பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்லபட்டையை கடத்திச்செல்ல முற்பட்டபோது அவரை தாம் கைது செய்தனர் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேஷியா வழியாக, சீனாவின் ஷாங்காய் நகருக்கு இவர் செல்லத் தயாராக இருந்தார் என்றும், அவர் வைத்திருந்த பை ஒன்றில் வல்லப்பட்டை மறைத்துவைத்திருந்தமை கட்டுபிடிக்கப்பட்டது என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளின் மதிப்பு பத்து மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
01 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409566210&archive=&start_from=&ucat=1&
ஜெயக்குமாரி காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்!
பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப் பேரவை, இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது. சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு தேசிய சமாதானப் பேரவை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- பாலேந்திரன் ஜெயக்குமாரியின் சர்ச்சைக்குரிய விதத்திலான கைதும் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாததும், பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் கண்மூடித்தனமான தண்டைனைக்காக இலக்கு வைக்கப்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தனர் என்று கூறி சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு பாலேந்திரன் ஜெயக்குமாரி உதவினார் என்று கூறியே அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை நிருபிப்பதற்கு அரசாங்கம் இதுவரை நம்பகத்தன்மை மிக்க ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் அவரை காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பது அவர் பழிவாங்கப்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

காணமற்போனோர் சார்பாகக் குரல் கொடுப்பதற்கான அவரது அடிப்படை உரிமை பறிக்கப்படுகின்றது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவரை தடுத்து வைத்திருப்பதன் மூலமாக ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுக்கும் 'நீங்களும் இவ்வாறு பழிவாங்கப்படுவீர்கள்' என்ற அச்சமூட்டும் செய்தியே தெரிவிக்கப்படுகின்றது.

நாங்கள் அவரது உளநலம் குறித்தும் கவலைகொண்டுள்ளோம், அவர் சித்திரவதை செய்யப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. இவ்வாறு தொடரும் மனித உரிமை மீறல்களே மக்கள் யுத்தத்தின் இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்பது குறித்த ஐ.நா விசாரணைக்கு ஆதரவளிக்க காரணமாகியுள்ளது.

அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்காத நிலையில் ஐ.நா விசாரணைக் குழுவுக்குச் செல்ல நினைப்போரை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே ஜெயக்குமாரியின் கைதை நாம் நோக்குகிறோம்.- என்றுள்ளது.
01 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409566428&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten