ஐஸ்கிறீம் கேட்ட மகளை தாக்கிய தாய்
இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட தாய், செல்வச்சந்திநி ஆலய வளாகத்தில் தனது 5 வயது மகளுடன் கற்பூரம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த 5 வயது சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அவர் தன் மகளை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால், அச்சிறுமியின் மூக்கு மற்றும் வாயால் இரத்தம் வடிந்துள்ளது.
இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக செல்வச்சந்நிதி உபபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்டுள்ளார் என்றும் அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து, இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து, யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய், நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையிலேயே அவர், தனது 5 வயது மகளை இன்று கடுமையாகத் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/80836.html
ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஆசாமி அகப்பட்டார்
ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி தங்களை பாலியல் ரீதியான துன்புறுத்துவதாக மஹாவ பொலிஸ் நிலையத்தில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், 30 வயதான சந்தேகநபரை, வதுரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இந்நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/80839.html
ரூ.50, 000க்கு சிசு விற்பனை அறுவர் அம்பலம்
கொழும்பு-15 முகத்துவாரம் (மோதரை) பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர், இராகமை வைத்தியசாலையில் கடந்த 24ஆம் திகதி ஆண் சிசுவொன்றை பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிசுவின் தாய் மற்றும் தந்தையின் சம்மதத்துடன் மோதரை பிரதேசத்தில் வசிக்கும் பெண்கள் இருவரின் ஊடாக உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தை சேர்ந்த இளம் தம்பதியினருக்கு 50,000 ரூபாவிற்கு சிசுவை விற்பனை செய்துள்ளனர்.
இதனையடுத்து முகத்துவாரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சிசுவின் தாய், தந்தை, சிசுவை விற்பதற்கு உதவிய பெண்கள் இருவர் மற்றும் குழந்தையை வாங்கிய இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்ட்ட அறுவரையும் கொழும்பு, புதுக்கடை 4 இலக்க நீதவான் நீதிமன்றித்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/80842.html
மஹிந்தரின் தாதியர்கள் வடக்கில்
இவர்கள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்ட வைத்தியசாலைகளிற்கும், பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதாராவைத்தியசாலைகளிற்கும், வடமாகாணத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சௌ;ளவுள்ள 46 தாதியர்களின் வெற்றிடங்களிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த தாதியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டு வேலையின்றி ஏராளமான இளைஞர், யுவதிகள் இருக்கும் நிலையில் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியில் பேசமுடியாத சிங்கள மொழியிலான தாதியர்களை நியமிப்பது அனைத்து தரப்பிடையேயும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது
http://www.jvpnews.com/srilanka/80845.html
Geen opmerkingen:
Een reactie posten