[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 01:21.09 AM GMT ]
இலங்கை அரசாங்கம் பற்றி இந்தியா தெளிவாக புரிந்து கொண்டுள்ளது.
அரசாங்கம் தேர்தல்களை நடாத்திää அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திற்கு கிடையாது.
தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை வழங்கியிருந்தால்ää இந்தியா சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா கருதுகின்றது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தவில்லை.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இந்தியாவிற்கு போதியளவு தெளிவு காணப்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் பற்றி நாங்கள் தனியாக எதனையும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUls0.html
பௌர்ணமி தினத்தில் போதையில் தள்ளாடிய சிங்கள பெண்கள் - ஆளும் கட்சிக் கூட்டத்தில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 02:10.10 AM GMT ]
கம்பஹா பியகம பாடசாலை மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விரும்பியவாறு வரையறையின்றி பியர் குடித்து மகிழ ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்தர்கள் புனித நாளாக கருதும் நிக்கினி பௌர்ணமி தினமன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்கு, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
கூட்டம் நிறைவடைவதுடன் இந்த பியர் விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் பியர் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் போதையில் தள்ளாடியதாகவும், மது போதையில் வாகனங்களைச் செலுத்தியதாகவும் இதனைப் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பியகம எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன சம்பத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUls4.html
வாரியபொலவில் யுவதியின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் கைது - 6 வயது மகளை கொலை செய்த தாய் கைது
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:52.05 AM GMT ]
இளைஞர் குறித்த யுவதியை வாய்மொழி மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் வாரியபொல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த இளைஞரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியையும் பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தாயின் தாக்குதலில் 6 வயது சிறுமி பலி - வெல்லம்பிட்டியவில் சம்பவம்
பேருவளையில் தந்தையின் கொடூரமான தாக்குதலில் ஒன்றரை மாத பெண் குழந்தை பலியான சம்பவத்தின் பின்னர், தாயின் தாக்குதலில் 6 வயது பெண் பிள்ளை உயிரிழந்த சம்பவம் ஒன்று பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு நகருக்கு அருகில் உள்ள வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொலன்னாவ நாகமுல்ல வீதியில் வசித்து வந்த 6 வயதான பாத்திமா சஃபியா என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தங்கையின் கழுத்தை நெரித்து தாய் தனது கால்களால் தாக்கியதாக உயிரிழந்த சிறுமியின் சகோதரரான 7 வயது சிறுவன் தெரிவித்துள்ளார்.
தாயின் கொடூரமான தாக்குதலில் காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் நேற்று அதிகாலை கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 29 வயதான சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/
Geen opmerkingen:
Een reactie posten