தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

மகிந்தவின் இந்திய வருகை கண்டித்து மாணவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் !



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ள அழைத்தமையை கண்டித்து தமிழ் நாடு மாணவர் அமைப்புகள் சென்னையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டன.
தமிழ் நாடு மாணவர் இயக்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் சென்னை தி நகர், தணிகாசலம் வீதியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் கமலாயம் அலுவலகத்தை இன்று முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் இடை வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து மாணவர்கள் வழியில் இருந்தவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிங்கள அரசுடன் உறவை கொண்டிருந்த காங்கிரஸ் தமிழ் நாட்டில் இருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்டது போல், பாரதீய ஜனதா கட்சியும் தமிழகத்தில் விரட்டப்படும் என தமிழ் நாடு மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு பஸ் ஏற்றி தேனாம்பேட்டையில் உள்ள மண்டபம் ஒன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkp2.html

Geen opmerkingen:

Een reactie posten