தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

தமிழகத்துக்கு மீண்டும் இலங்கை அகதிகள்!

தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஊடக அமைப்புகள் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 10:38.19 AM GMT ]
தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, பொது மகஜரில் மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று மாலை கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் சேவை தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர்களின் சங்கம், ஐக்கிய ஊடகவியலாளர்களின் ஒன்றியம், இளம் கிறிஸ்தவ ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகிய ஊடக அமைப்புகள் இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதற்காகவும் தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கவும் கொலை செய்யப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான மற்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
அத்துடன் தீக்கரையாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை நடத்துமாறும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlw6.html

தமிழகத்துக்கு மீண்டும் இலங்கை அகதிகள்
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 10:39.44 AM GMT ]
இலங்கையில் இருந்து அகதிகள் குழுவொன்று கடல் மார்ககமாக இன்று தமிழகம் சென்றடைந்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் தாங்கள் இந்தியாவுக்குத் தப்பி வந்திருப்பதாக இந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கை அகதிகள் கடல் மார்க்கமாக இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
அவர்களிடம் தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது அகதிகள் குழுவைச் சேர்ந்தவர்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம்.
எங்களை போல் சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர்.
மேலும் இலங்கையில் விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை இராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்' என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் செல்வது சமீப காலமாக குறைந்திருந்தது.
இந்த நிலையில் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlw7.html

Geen opmerkingen:

Een reactie posten